முகப்பு /செய்தி /விளையாட்டு / உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?- இங்கிலாந்தின் யூரோ கோப்பை தோல்வியைக் கேலி செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?- இங்கிலாந்தின் யூரோ கோப்பை தோல்வியைக் கேலி செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

மோர்கன்

மோர்கன்

உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்பது வடிவேலுவின் பிரபல ஜோக், அதன் பிறகு அது லட்சக்கணக்கான மீம்களை ஆக்ரமித்தது வேறு கதை, ஆனால் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கிண்டலை யூரோ கோப்பையை இத்தாலியிடம் இழந்த இங்கிலாந்து கால்பந்து தோல்வியை நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஏவி விட்டு மகிழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

யூரோ கோப்பை 2020 கால்பந்து இறுதியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதி முழு நேர ஆட்டம் 1-1 என்று ட்ராவில் முடிய, ஆட்டம் கூடுதல் நேரத்திலும் இழுபறியாக முடிய, பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தின் மார்கஸ் ராஷ்போர்டு, ஜேடன் சாங்கோ, சாக்கா ஆகியோர் கோல்கள் பாதை மாற இத்தாலி 3-2 என்று வெற்றி பெற்று ஐரோப்பிய சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.

1966 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு எந்த ஒரு பெரிய கோப்பையையும் வெல்லாத இங்கிலாந்து அணிக்கு இந்தத் தோல்வி இருதயம் நொறுங்கும் தோல்வியாக அமைந்தது.

இதையும் படிங்க: Euro 2020 Final | நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்: இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பேற்றிய இத்தாலி வீரர்

அப்படியே கிரிக்கெட் பிளாஷ்பேக்கைப் பார்த்தோமானால் 2019 உலகக்கோப்பை நியூசிலாந்தின் இருதயம் நொறுங்கியது, ஆட்டம் டை ஆனது. சூப்பர் ஓவரும் டை ஆனது. அந்த நிலையில் பவுண்டரிகள் அதிகம் அடித்த அணிக்குக் கோப்பை என்று விதிப்படிதான் தீர்மானிக்கப்பட்டது. இங்கிலாந்து அப்படித்தான் உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்றது.

தையும் பாருங்க: படங்கள்- யூரோ 2020 சாம்பியன் இத்தாலி: முக்கியத் தருணங்கள்

இது நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது, இன்னமும் கூட அந்த கோப்பை இழப்பை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தின் யூரோ கோப்பை இறுதிப் போட்டித் தோல்வியை வைத்து இங்கிலாந்து ரசிகர்களின் வெந்த புண்ணில் உப்பைத் தடவினர் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஏன் பெனால்டி ஷூட் அவுட்டில் தீர்மானிக்கப்பட வேண்டும், எந்த அணி அதிக பாஸ்கள் செய்ததோ அதை வைத்து வின்னரைத் தீர்மானிக்கலாமே” என்று நக்கலடித்துள்ளார்

மற்றொரு முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் அடித்த கிண்டலில், “எனக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கிலாந்து அணிக்குத்தான் அதிக கார்னர்கள் கிடைத்தன. எனவே அவர்கள்தான் சாம்பியன்” என்று கிண்டலடித்துள்ளார்.

இந்த கிண்டல்கள் வைரலாகி வருகின்றன.

First published:

Tags: England, Euro Cup 2021, ICC Cricket World Cup 2019, New Zealand