டோக்கியோ ஒலிம்பிக் : பாய்மர படகுப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் : பாய்மர படகுப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி

நேத்ரா குமணன்

சென்னையை சேர்ந்த 23 வயதான நேர்தா குமணன் முதல் இடம் பிடித்து புள்ளிகளின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

  • Share this:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டிக்கு சென்னையை சேர்ந்த 23 வயதான நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளார்.

ஓமன் நாட்டில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய நாடுகளுக்கு தகுதி சுற்றுப்போட்டி நடைபெற்று வருகிறது.
பாய்மர படக்குப்போட்டியின்  லேசர் ரேடியல் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 23 வயதான நேர்தா குமணன் முதல் இடம் பிடித்து புள்ளிகளின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.ஒலிம்பிக் வரலாற்றில்  பாய்மர படகுப்போட்டியில் இதற்கு முன் ஒன்பது வீரர்கள் பங்கேற்றிருந்தாலும் வீராங்கனையாக முதல் முறையாக நேர்தா களமிறங்குகிறார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
Published by:Vijay R
First published: