• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் - நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் - நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

120 ஆண்டுகாலமாக தடகளத்தில் தங்கப் பதக்கத்துக்காக ஏங்கித் தவித்த இந்தியர்களை நிம்மதியடையச் செய்திருக்கிறார்.

  • Share this:
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பின்னர் எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை என தெரிவித்த நீரஜ் சோப்ரா, தலையணைக்குள் தங்கப் பதக்கத்தை வைத்து இரண்டொரு மணிநேரம் மட்டுமே தூங்கியதாக தெரிவித்திருக்கிறார்.

டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றவர் என்ற வரலாற்றுச் சாதனையை நேற்றைய தினம் ( ஆகஸ்ட் 7) படைத்தார்.

இதன் மூலம் 23 வயதாகும் நீரஜ் சோப்ரா, 120 ஆண்டுகாலமாக தடகளத்தில் தங்கப் பதக்கத்துக்காக ஏங்கித் தவித்த இந்தியர்களை நிம்மதியடையச் செய்திருக்கிறார். மேலும் தனி நபர் பிரிவில் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் படைத்திருக்கிறார்.

Also Read:  நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்: சுதந்திரத்துக்கு பின் தங்கம் வெல்லும் முதல் இந்தியர்!

ஏற்கனவே ஆசிய சாம்பியன், காமன்வெல்த் சாம்பியன், உலக ஜூனியர் சாம்பியன் போன்ற பட்டங்களை வென்றிருக்கும் நீரஜ் சோப்ரா, இந்த சாதனைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

நீரஜ் சோப்ரா


ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட்ட நீரஜ், டோக்யோ ஒலிம்பிக்கில் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அவர் இந்த சாதனையை செய்வதற்காக பல போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. கடந்த ஆண்டு அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. காயத்தில் இருந்து மீண்டதுடன், கொரோனா காலத்திலும் பயிற்சி என பல சவால்களை கடந்து மன ரீதியில் தயாராகி வந்து தங்கத்தை வென்றிருக்கிறார்.

Also Read:   அமைச்சருக்கான சலுகைகள் தருவதாக அறிவித்த கர்நாடக அரசு – மறுத்த எடியூரப்பா!

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியா டுடே நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இறுதிப் போட்டிக்காக மன ரீதியில் என்னை தயார்படுத்தினேன். இந்த தருணத்துக்காக நீண்ட காலம் காத்திருந்தேன். அப்படிப்பட்ட இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்படவேண்டும் என நினைத்தேன். தற்போது தங்கம் வென்றிருப்பதன் மூலம் என மனதில் இருந்த பாரம் நீங்கிவிட்டது.

போட்டியின் போது எனக்கு பெரிய அளவில் எண்ணங்கள் ஏதும் இல்லை. இந்த தருணத்துக்காக தான் சிறப்பாக பயிற்சி பெற்றோம். எனது முழு கவனமும் ஈட்டி ஏறிதல் மீதே இருந்தது.

Also Read:    Taliban vs Afghan Forces | ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

ஆனால் பரிசளிப்பு மேடையில் நின்ற போது நான் கடந்து வந்த பலவும் எனக்குள் எண்ண ஓட்டங்களாக வந்தது. காயமடைந்ததை நினைத்துப் பார்த்தேன். அதில் இருந்து மீள்வோமா என்ற சந்தேகம் கூட இருந்தது, ஆனால் இப்போது தங்கம் வென்ற பிறகு அது எதுவுமே பெரிதாக படவில்லை, கடவுள் எனக்கு கொடுத்த எல்லாமுமே நல்லவைக்கே.

பரிசளிப்பு விழா மேடையில் நின்ற தருணம் மிகவும் சிறப்புக்குரியது. இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது நான் அழவில்லை ஆனால் எக்கச்சக்க எமோஷன் எனக்குள் இருந்தது. இறுதியாக நேற்றிரவு எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. ஒன்றிரண்டு மணி நேரம் தான் தூங்கியிருப்பேன். என் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தான் தூங்கினேன். இறுதியாக நாட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ததாக நினைத்தேன் என்றார் நீரஜ் சோப்ரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: