டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, சொந்த கிராமத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட நிலையில் அவர் திடீரென வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறியிருக்கிறார். அதிக காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பின்னர் அனைவரின் பார்வையையும் தன் பக்கமாக ஈர்த்தவர் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் முதல் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று சரித்திரம் படைத்தவர். மேலும் தனி நபர் பிரிவில் அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் இரண்டாவது தங்கம் வெல்லும் இந்தியர் என்ற பெருமையும் அவரையே சேரும்.
Also Read:
ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை – தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!
இந்தியாவுக்கு திரும்பிய நீரஜ் சோப்ரா 75வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது அனைவரையும் ஈர்த்தது. அவர் தொடர்ந்து பல இடங்களிலும் பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவுரவிக்கப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ராவுக்கு அதிக காய்ச்சல் இருந்ததால் அவரால் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்.
Also Read:
ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் – கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!
சில நாட்களுக்கு முன்னர் நீரஜ் சோப்ராவுக்கு காய்ச்சல் இருந்தது, அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததால் வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சிகளில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார்.
டெல்லியில் இருந்து சொந்த ஊரான பானிபட்டுக்கு அவர் கார் மூலம் ஊர்வலமாக இன்று அழைத்து வரப்பட்டிருக்கிறார். 3 மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை அவர் 6 மணி நேரமாக கடந்து சென்றுகொண்டிருந்ததாக அவருடைய குடும்பத்தினரும் உறுதி செய்திருக்கின்றனர்.
Also Read:
பொது மன்னிப்பு வழங்குகிறோம், பணிக்கு திரும்புங்கள் – அரசு ஊழியர்களுக்கு தாலிபான்கள் உத்தரவு
இதனிடையே நீரஜ் சோப்ராவுக்கு பானிபட் அருகேயுள்ள அவருடைய சொந்த கிராமமான காந்திராவில் மேளம் தாளம் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நீரஜுக்காக சுர்மா எனும் உணவு வகையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் கோவிலில் வைத்து நீரஜின் தங்கப் பதக்கத்தை வழிபாடு செய்ய இருப்பதாகவும் அவருடைய தாயார் சரோஜ் தேவி தெரிவித்திருக்கிறார். மேலும் நீரஜின் வருகையால் அவருடைய கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 25,000 முதல் 30,000 பேருக்கு உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட இருப்பதாக அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.