மதிப்பு மிக்க ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் இன்று: நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல வாழ்த்துவோம்
மதிப்பு மிக்க ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் இன்று: நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல வாழ்த்துவோம்
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவின் முதல் தடகள தங்க மகன் ஆன நீரஜ் சோப்ரா சமீபமாக பின்லாந்தின் ஜாம்பவான்கள் மத்தியில் தங்கம் வென்றார், பிறகு நடந்த போட்டியில் வெள்ளி வென்றார், இன்று, வியாழன், நடைபெறும் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் கடினமான வீரர்கள் மத்தியில் போட்டியிடுகிறார் நீரஜ் சோப்ரா, அவர் தங்கம் வெல்ல நாம் வாழ்த்துவோம்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவின் முதல் தடகள தங்க மகன் ஆன நீரஜ் சோப்ரா சமீபமாக பின்லாந்தின் ஜாம்பவான்கள் மத்தியில் தங்கம் வென்றார், பிறகு நடந்த போட்டியில் வெள்ளி வென்றார், இன்று, வியாழன், நடைபெறும் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் கடினமான வீரர்கள் மத்தியில் போட்டியிடுகிறார் நீரஜ் சோப்ரா, அவர் தங்கம் வெல்ல நாம் வாழ்த்துவோம்.
24 வயதான் இந்த சாதனையாளர் நீரஜ் சோப்ரா துர்க்குவில் நடைபெற்ற பாவோ நூர்மி ஈட்டி எறிதலில் 89.30 மீ தூரம் எறிந்து சாதனை புரிந்தார், பிறகு கடினமான மழை சூழ்நிலையில் கூர்ட்டானே போட்டியில் 86.60 மீ விட்டெறிந்து சாதனை புரிந்தார். இந்த இரண்டுமே பின்லாந்தில் நடைபெற்றது, இதில் கடினமான சூழலில் சாதனை புரிந்ததோடு தனது அபார பேலன்ஸினால் காயமடையாமல் தப்பினார்.
இந்நிலையில் மதிப்பு மிக்க ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீகில் அவர் ஆடப்போகும் முன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெரிய பிரச்சனை நான் 13-14 கிலோ பெருத்திருக்கிறேன். உடனே என் உடல்தகுதியை சீர் செய்ய வேண்டும்” என்றார்.
ஜூரிச்சில் 2018-ல் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 85.73 மீ தூரம் விட்டெறிந்தார். டைமண்ட் லீகில் இவர் இதற்கு முன்பு 2017, 2018-ல் பங்கேற்றாலும் பதக்கம் வெல்ல முடியவில்லை. 2 முறை 4ம் இடத்தில் முடிந்தார். தோஹாவில் மே, 2018-ல் நடந்த டைமண்ட் லீகில் 87.43 மீ தூரம் எறிந்தார்.
இந்நிலையில் அமெரிக்கா, யூஜீனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னதாக ஸ்வீடன் தலைநகரில் இன்று நடக்கும் டைமண்ட் லீக் வெற்றி சோப்ராவுக்கு மிக முக்கியமானது. இன்றைய தினம் கடினம் ஏனெனில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜாம்பவான்களும் போட்டியில் உள்ளனர்.
இந்திய சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா இந்த மாதத்தில் உலகச் சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்சை இருமுறை தோற்கடித்தார். தோஹாவில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 93.07 மீ தூரம் எறிந்தார். பிறகு பாவோ நூர்மியில் சோப்ரா தங்கம் வெல்ல ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 என்றும் கூர்ட்டானேயில் 84.75 மீ தூரமும் எறிந்து பின்னடைவு கண்டார்.
இன்றைய டைமண்ட் லீக் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளி வென்ற செக்.குடியரசு வீரர் ஜேகப் வாட்லீயிச், சக நாட்டு வீரரும் வெண்கலம் வென்றவருமான விடேஸ்லாவ் வெஸ்லியும் இன்று களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று டைமண்ட் லீகில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து நாட்டுக்கும் அவருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.