Home /News /sports /

ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்: வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை

ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்: வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை

மதிப்பு மிக்க ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் 89.94 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார், 90 மீ என்ற மைல்கல்லைத் தொட 6 செமீ மட்டுமே குறைவு. இந்த த்ரோ அவரது சிறந்த த்ரோவாகும்.

நேற்று மற்ற த்ரோக்களில் 84.37மீ, 87.46 மீ, 86.67 மீ, 86.84மீ, ஆனால் பைனல் த்ரோவில் 89.94 என்று அவரது தேசிய சாதனையான 89.30 என்ற தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இந்த முறை 90.31 தூரம் வீசி தங்கம் வென்றார். இதுவே அவரது 3வது முயற்சியில் வந்தது.

Also Read: மதிப்பு மிக்க ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் இன்று: நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல வாழ்த்துவோம்

ஆண்டர்சன் பீட்டர்ஸ் இருமுறை 90 மீ தூரத்தை இந்த சீசனில் கடந்துள்ளார். டைமண்ட் லீகின் தோஹா லெக்கில் 93.07மீ, நெதர்லாந்தில் 90.75மீ வீசி எறிந்தார்.

ஜெர்மனியின் ஜூலியன் வீபர் தனது 5வது முயற்சியில் 89.08மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜேகப் வாட்லீயிச் 88.59மீ வீசி எறிந்து 4வது இடமே பிடிக்க முடிந்தது.

8 வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளி வென்ற வெஸ்லி 7வது இடத்தில் முடிந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்த டைமண்ட் லீக் மொனாகோவில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது, இதில் நிச்சயம் சோப்ரா தங்கம் வெல்ல முயற்சி செய்வார் என்று நம்பலாம்.

90மீ தூரங்களை எல்லாம் சர்வசாதாரணமாக கடக்கும் ஜெர்மனியின் ஜொஹான்னஸ் வெட்டர் காயம் காரணமாக இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:

Tags: Neeraj Chopra

அடுத்த செய்தி