ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

25 தங்கம் உட்பட 74 பதக்கங்கள்... தேசிய விளையாட்டு போட்டியில் 5ம் இடம் பிடித்த தமிழகம்

25 தங்கம் உட்பட 74 பதக்கங்கள்... தேசிய விளையாட்டு போட்டியில் 5ம் இடம் பிடித்த தமிழகம்

தமிழகம் 5வது இடம்

தமிழகம் 5வது இடம்

National Games 2022: 2015ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில், 52 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்த ஆண்டு 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு 5-வது இடம் பிடித்துள்ளது.

  36-வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த 29-ம் தேதி குஜராத்தில் நடைபெற்றது. இதில், 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில், 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் சர்வீசஸ் அணி முதலிடத்தை தக்க வைத்தது.

  இரண்டாம் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை அரியானாவும் பிடித்தன. நான்காவது இடத்தை கர்நாடகா பிடித்தது. தமிழ்நாடு 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலத்துடன் 5-வது இடத்தை பிடித்தது. தடகளத்தில் மட்டும் 7 தங்கம் உட்பட 18 பதக்கங்களை தமிழக வீரர்களும் வீராங்கனைகளும் அள்ளியுள்ளனர்.

  2015ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில், 52 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்த ஆண்டு 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  Also read : நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட... தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

  இந்நிலையில், தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

  Published by:Murugesh M
  First published: