உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னணி வீராங்கனை ஒசாகா விலகல்

    கோப்புப் படம்

    2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து தான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒசாகா தெரிவித்துள்ளார்.

    • Share this:
      பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.

      பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் கொரோனா பரவலுக்கு இடையே மே 30ம் தேதி பாரீஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடவர் முதல்சுற்றுப் போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்ச் ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் திம் 68வது நிலையில் உள்ள ஸ்பெயின் வீரர் பாப்லோ அந்துஜாரிடம் தோல்வி அடைந்தார்.

      அதேவேளையில், பெண்கள் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா  ருமேனியாவைச் சேர்ந்த பாட்ரிசியா மரியா டிக்கை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பை நவோமி ஒசாகா புறக்கணித்தார். இதனால் போட்டி குழுவினர் ஒசாகாவுக்கு  15 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

      இதையும் படிங்க.. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சாகச கார் ஏலத்துக்கு வருகிறது..

      இந்த சர்ச்சை முடிவு பெறுவதற்கு முன்பாக, புதிய சர்ச்சையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஒசாகா அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்,” தற்போதைய சூழலில், போட்டித் தொடருக்கும், பிற வீரர்-வீராங்கனைகளுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது போட்டித் தொடரில் இருந்து நான் விலகுவதே ஆகும். இதன் மூலம் அனைவரும் டென்னீஸ் போட்டியில் கவனம் செலுத்துவார்கள்” என பதிவிட்டுள்ளார்.



      2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து தான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஒசாகா, பத்திரிகையாளர் சந்திப்பில் தான் கனிவாக நடத்தப்படும்போதிலும், உலகத்தின் முன் பேசுவதால் தான் அதிகப்படியான பதற்றம் அடைவதாகவும், சிறப்பான பதிலளிக்க அதிக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

      மேலும் படிக்க.. ஐ.பி.எல். தொடர் அமீரகத்துக்கு மாற்றம்- எப்போது தொடங்குகிறது?


      உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
      Published by:Murugesh M
      First published: