ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனையான, ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகா பங்கேற்கவில்லை என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் தொடர், வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதிலிருந்து விலகியதற்கான காரணத்தை ஒசாகா தரப்பு தெரிவிக்கவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ், ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்கராஸ் ஆகியோரும் விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடர் களையிழந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 2 முறை சாம்பியன் பட்டத்தை கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஒசாகா வென்றிருக்கிறார். அவர் பங்கேற்க மாட்டார் என்பதை ட்விட்டரில் அறிவித்துள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் நிர்வாகம், அவரை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று ஐரோப்பாவின் நம்பர் ஒன் வீராங்கனை எம்மா ரடுகேனோவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை.
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்… இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது அமெரிக்க அணி
நயோமி ஒசாக கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘டி20 கேப்டன்ஷிப்பை பாண்ட்யாவிடம் ரோஹித் ஒப்படைக்க வேண்டும்’ – முன்னாள் வீரர் பரபரப்பு பேட்டி
இதற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது பெயர், ஆஸ்திரேலியன் ஓபன் பயற்சி ஆட்டத்திலும் இடம்பெறவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tennis