சுஷில் குமார் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம்: மீரட்டில் இருப்பதாக தகவல்

மல்யுத்த வீரர் சுஷில் குமார்

கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 1 லட்சம் பரிசு என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

 • Share this:
  கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 1 லட்சம் பரிசு என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

  இந்நிலையில் அவர் மீரட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  37 வயதாகும் சுஷில் குமார் இந்தியாவுக்காக 2008-ல் வெண்கலமும், 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கு தொடர்பாக சுஷில் குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

  இவருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறவுக் குற்றவாளியான சுஷில் குமார் எங்கு இருக்கிறார் என்ற தகவலை அளித்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் என்று போலீஸ் அறிவித்துள்ளது. சுஷில் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

  இதனிடையே சுஷில் குமார் புகைப்படம் ஒன்று வெளியானது அதில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் அவர் சுங்கவரி பிளாசாவைக் கடக்கும் கார் ஒன்றில் சுஷில் குமார் அமர்ந்திருந்தார்.

  கொலை நடந்த 2ம் நாளில் இந்த போட்டோ எடுக்கப்பட்டிருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். காரை வைத்து சுஷில் குமார் இருக்கும் இடத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

  முன்னதாக, இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானா மற்றும் அவரது நண்பர்கள், காயமடைந்த சோனு மஹல் உட்பட அனைவரும் ஸ்டேடியத்துக்கு அருகில் சுஷில் குமாருக்கு தொடர்புடைய வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களைக் காலி செய்யச் சொல்லியும் காலி செய்யவில்லை, இதனையடுத்து பலவந்தமாக காலி செய்யவைக்கப்பட்டனர். மேலும் சத்ரசால் ஸ்டேடியத்தில் மற்றவர்கள் முன்னிலையில் சாகர் ரானா சுஷில் குமாரை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியுள்ளார். மேலும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சுஷில் குமாரை, ரானா மிரட்டியுள்ளார்.

  செவ்வாய்- புதன் இடைப்பட்ட இரவில் சத்ரசால் ஸ்டேடியத்தில் இரு மல்யுத்த வீரர்கள் குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட பிரச்சினை பெரிதாகியுள்ளது. பெரிதாகி பெரிய சண்டையில் பலர் காயமடைந்தனர், இதில் சாகர் ரானா காயத்துக்குப் பலியானது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: