கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாலிபாலிலும் தோனி கில்லி தான்

ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெறவில்லை.

news18
Updated: August 5, 2019, 10:21 AM IST
கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாலிபாலிலும் தோனி கில்லி தான்
தோனி
news18
Updated: August 5, 2019, 10:21 AM IST
ராணுவ வீரர்களுடன் தோனி வாலிபால் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2 மாதங்கள் ஓய்வு எடுத்துள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, காஷ்மீரில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாராமிலிட்டரியின் 106-வது பட்டாலியனில் இயங்கும் விக்டர் படையில் தோனி இணைந்துள்ளார். வருகிற 15-ம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபடுவார்.

மகேந்திர சிங் தோனிக்கு 2011-ம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.Also watch

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...