Ballon d'Or award: ரொனால்டோ, மெஸ்சியை முந்திய லூகா மோட்ரிச்!

#LukaModric wins the Ballon d'Or | 'பலூன் டி ஆர்' விருதில் கடந்த 2008 முதல் சுமார் 10 ஆண்டுகளாக நீடித்த ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகிய இருவரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

Web Desk | news18
Updated: December 4, 2018, 4:42 PM IST
Ballon d'Or award: ரொனால்டோ, மெஸ்சியை முந்திய லூகா மோட்ரிச்!
தங்கப்பந்து விருதுடன் மோட்ரிச் (AFP)
Web Desk | news18
Updated: December 4, 2018, 4:42 PM IST
நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கான பட்டியலில் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, குரோசியாவின் லூகா மோட்ரிச் தங்கப்பந்து விருதைப் பெற்று வரலாறு படைத்தார்.

சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் கவுரவிக்கும் வகையில், பிரான்ஸ் கால்பந்து சங்கம் சார்பில், 1956-ம் ஆண்டு முதல் தங்கப்பந்து விருது வழங்கப்படு வருகிறது. இதற்கிடையில், 2010 முதல் 2015-ம் ஆண்டு வரை சர்வதேச கால்பந்து சம்மேளனமான (பிபா) உடன் இணைந்து இவ்விருது வழங்கப்பட்டது.

பிபா உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், மீண்டும் பிரான்ஸ் நாடே, சிறந்த வீரருக்கான 'பலூன் டி ஆர்' எனப்படும் தங்கப் பந்து விருதை வழங்கி வருகிறது.

அண்மையில், இந்த விருதுக்கான 30 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இறுதிப் பட்டியலில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சி, பிரான்சின் க்ரீஸ்மன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி குரோஷியாவின் லூகா மோட்ரிச் முதலிடம் பிடித்து, தங்கப்பந்து விருதை தட்டிச் சென்றார்.



கடந்த 2008 முதல் சுமார் 10 ஆண்டுகளாக, ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகிய இருவரும் இவ்விருதை மாறி மாறி வென்று ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

தற்போது, இவர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 33 வயதான மோட்ரிச், ரஷ்யாவில் நடந்துமுடிந்த உலகக்கோப்பையில் குரோசிய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Also Watch...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626