தேசிய அளவில் பதக்கம் வென்ற சச்கர நாற்காலி கூடைப்பந்து வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Wheelchair Basketball | MK Stalin | பெண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்தையம் தமிழக அணி வென்றது.

தேசிய அளவில் பதக்கம் வென்ற சச்கர நாற்காலி கூடைப்பந்து வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
  • News18
  • Last Updated: July 1, 2019, 11:00 PM IST
  • Share this:
தேசிய அளவிலான சச்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணியினர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் 6-வது தேசிய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி ஜூன் 24  முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தொடரில் தமிழக பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சக்கர நாற்காலி கூடைப்பந்து மகளிர் இறுதிப்போட்டியில் மஹாராஷ்டிரா - தமிழக அணிகள் மோதின. இந்த போட்டியில் மஹாராஷ்டிரா அணி 25 -14 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்தையம் தமிழக அணி வென்றது.


பதக்கம் வென்ற தமிழக அணி வீரர்கள் அறிவாலாயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் அடுத்த முறை நடக்கும் போட்டியில் முதலிடம் பெற்று தமிழகத்திற்கு வெற்றி தேடித் தருவோம் என  ஸ்டாலினிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.

Also Watch

First published: July 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading