Mirabai Chanu: ரியோ ஒலிம்பிக் தோல்விதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது: வெள்ளி மங்கை மீராபாய் சானு

வெள்ளி வென்ற மீராபாய் சானுவின் கடினமான வாழ்க்கை.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ வெற்றிக்கு படிக்கட்டாக அமைந்தது என்கிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு.

  • Share this:
    2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ வெற்றிக்கு படிக்கட்டாக அமைந்தது என்கிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு.

    மணிப்பூரின் மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் தோன்றி விறகு தூக்கி பிழைத்த மீராபாய் சானு தன் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் மூலம் தேசத்தையே தூக்கி நிறுத்தியிருக்கிறார்.



    ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தோல்வி கண்ட மீராபாய் சானு அதன் பிறகு கோவிட் காலத்திலும் கடினமாக உழைத்து எந்தவித பிசிறும் இல்லாமல் கிளீனாக எடைத்தூக்கி 119 கிலோ என்ற உலகச் சாதனையுடன் டோக்கியோ வந்தார். ஒலிம்பிக் வெள்ளி வென்ற முதல் பளுதூக்கும் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒலிம்பிக் அமைப்பே தன் ட்விட்டர் பக்கத்தில், “கடினமான போராட்டத்துக்குப் பிறகு சானு சாய்கோம் மீராபாய் வெயிட் லிஃப்டிங்கில் 2ம் இடம் பிடித்தார். 49 கிலோ உடல் எடைபிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்தார்” என்றுபதிவிட்டுள்ளது.

    2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இவரால் சோபிக்க முடியவில்லை, அதன் நீங்காத் துயரம் இவரை ஆட்டிப்படைத்தது. 2017-ல் மீண்டெழுந்த மீராபாய் சானு உலக சாம்பியன்ஷிப் பளுத்தூக்குதலில் தங்கம் வென்று உலக சாதனை புரிந்தார். 2018-ன் பெரும்பகுதி முதுகு வலியால் அவதியுற்று வந்தார். பிறகு மீண்டு வந்த மீராபாய் 2019 உலக சாம்பியன்ஷிப்பில் ரெக்கார்ட் 200 கிலோ எடைத்தூக்கி சாதனை புரிந்தார். இது 4ம் இடத்தைப் பெற்றுத்தந்தாலும் அவரது தன்னம்பிக்கை முதலிடம் பெற்றது. 2021-ல் ஆசிய பளுத்தூக்கும் சாம்பியன்ஷிப்பில் 119 கிலோ எடைத்தூக்கி புதிய சாதனை படைக்க டோக்கியோ கதவுகள் அவருக்குத் திறந்தன.

    இந்நிலையில் மீராபாய் சானு கூறியதாவது, “நான் பதற்றமாக இருந்தேன் ஏனெனில் நாடே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதகக்த்தை வெல்வது என்று உறுதி பூண்டேன்.

    ரியோ ஒலிம்பிக் பின்னடைவுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், தவறு எங்கு செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு திருத்தினேன். ரியோ தோல்வியினால்தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன். நான் மிகவும் துயருற்றேன், இப்போது இங்கே நான் இருக்கிறேன் என்றால் ரியோ தோல்விதான் காரணம்.” என்றார் மீராபாய் சானு.
    Published by:Muthukumar
    First published: