Home /News /sports /

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ரிடர்ன்ஸ்.. ராய் ஜோன்சுடன் செப்.12-ஆம் தேதி மோதுகிறார்..

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ரிடர்ன்ஸ்.. ராய் ஜோன்சுடன் செப்.12-ஆம் தேதி மோதுகிறார்..

மீண்டும் களம் காணவுள்ள மைக் டைசன்

மீண்டும் களம் காணவுள்ள மைக் டைசன்

ஹெவிவெயிட் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக்டைசன், மீண்டும் களம் காண உள்ளார். இது உலகெங்கும் உள்ள விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மைக் டைசன்…இந்த பெயரைக் கேட்டாலே குத்துச்சண்டை அரங்கம் அதிரும். ஏதோ தைரியத்தில் எதிர்க்க துணிந்துவிட்ட எதிராளிக்கும் உள்ளூற உதரும். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா என்பது போல டைசனிடம் குத்து வாங்கி தலை சுற்றி கீழே விழுந்தவர்களுக்குத்தான் அதன் வலு தெரியும். குத்துச்சண்டை வரலாற்றில் டைசனின் குத்துதான் பலம்வாய்ந்தது என்பதால் ஹாடெஸ்ட் பஞ்சர் என விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர்.

  எண்பதுகளில் விடலைகளின் ஆதர்ச நாயகர்களாக ஜாக்கிசானும், டைசனும் திகழ்ந்தனர். ஜாக்கியாவது ரீல் ஹீரோ. ஆனால் டைசன் அடுத்தடுத்த நாக் அவுட் வெற்றிகளால் ரியல்லைப் ஹீரோவாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நின்றார். 1986ஆம் ஆண்டில், தன் 20வது வயதிலேயே ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டத்தை வென்று உலகை திரும்பபிப் பார்க்க வைத்தவர். இளம் டைசனின் குத்துக்களை தாங்க முடியாமல் டிரெவர் பெர்பிக் தள்ளாடி விழும் காட்சி ரசிகர்களின் நெஞ்சை வி்ட்டு என்றும் அகலாது.  வெற்றி வந்தால் சர்ச்சையும் வரத்தானே செய்யும். பாலியல் வல்லுறவு வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்தது, ஆட்டோகிராப் கேட்டு தொல்லை தந்த ரசிகர்களை பஞ்ச் விட்டு நாக் அவுட் செய்தது, "பேடஸ்ட் மேன் ஆன் தி பிளானட்" என தன்னைத் தானே அறிவித்துக் கொண்டது, போதை மருந்து உட்கொண்டு எதிரியை 38 விநாடிகளில் வீழ்த்தியதை ஒப்புக்கொண்டது என டைசனின் சேட்டைகளின் பட்டியல் மிக மிக நீளம்.

  யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல் 1990ல் ஜேம்ஸ் பஸ்டர் டக்ளஸிடமும், இவாண்டர் ஹோலிபீல்டிடம் வீழ்ந்தார். அதிலும் இரண்டாவது போட்டியில் ஹோலிபீல்ட் அசைந்து கொடுக்காதபோது கடுப்பாகி அவரது காதை டைசன் கடிக்க, ரத்தம் சொட்ட வேதனையில் ஹோலிபீல்ட் துள்ளி குதித்ததை எவரும் மறந்திருக்க முடியாது.

  ஆனால் இவையெல்லாம் முகம்மது அலி்க்கு நிகரான வீரர் என்ற பெருமையை டைசனிடமிருந்து பறித்துவிடவில்லை. வாழ்நாளில் 54 போட்டிகளில் வெற்றியும் அதில் 44ல் நாக் அவுட்டிலும் வெற்றி பெற்ற டைசன் 2005ல் பெற்ற தோல்வியுடன் ஓய்வுபெற்றார். ஆனால் 53 வயதில் மீண்டும் களம் காண ஆசை வந்தது. தான் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டு "ஐயாம் பேக்" என கடந்த ஆண்டு அறிவித்தார்.


  மேலும் படிக்க...

  அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

  அதன்பிறகு ஹோலிபீல்ட் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. தற்போது ஓராண்டுக்குப் பிறகு. ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் செப்டம்பர் 12ல் டைசன் மோதுவார் என டிரில்லர் இணையதளம் அறிவித்துள்ளது, ராய் ஜோன்ஸ் ஜூனியரும் பல பிரிவுகளில் நான்குமுறை உலகசாம்பியன் பட்டமும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். இந்த குத்துச்சண்டை காளைகளின் குத்துகக்ளை ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் நாட்களை எண்ணத் துவங்கியுள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sports, World Boxing Championship

  அடுத்த செய்தி