Home /News /sports /

மெஸ்ஸியை அணியிலிருந்து விடுவிக்க ரூ.6,000 கோடி செலுத்தச் சொன்ன பார்சிலோனா க்ளப் நிர்வாகம்..

மெஸ்ஸியை அணியிலிருந்து விடுவிக்க ரூ.6,000 கோடி செலுத்தச் சொன்ன பார்சிலோனா க்ளப் நிர்வாகம்..

மெஸ்ஸி

மெஸ்ஸி

பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி தொடர்ந்து விளையாட உள்ளார்.

    அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். தனது 13 வயதில் பார்சிலோனா கிளப் அணியில் கால்பதித்த மெஸ்ஸி, அந்த அணிக்காக 731 முறை விளையாடி 634 கோல்களை அடித்துள்ளார்.

    பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியதில் மெஸ்ஸியின் பங்கு முக்கியமானது.



    சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான தொடரில் பார்சிலோனா அணி, பெய்ரன் முனிச் அணியுடன் மோதி 2-8 என்ற கோல்கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தோல்வியை அடுத்து பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதற்கான அதிரடி முடிவை மெஸ்ஸி எடுத்தார். அவரின் இந்த முடிவு பார்சிலோனா அணி ரசிகர்களை பெரிதும் கவலையடையச் செய்தது.

    Also read: குடியாத்தம்: பரோடோ வங்கி ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி..

    இவரது ஒப்பந்தம் 2021-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், இலவச பரிமாற்றம் அடிப்படையில் தன்னை அணியில் இருந்து விடுவிக்க கோரிக்கை வைத்தார். ஆனால் 6,000 கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே அணியிலிருந்து விடுவிக்க முடியும் என பார்சிலோனா கால்பந்து நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

    இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், ஒரு சீசனுக்கு மட்டும் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாட உள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Football

    அடுத்த செய்தி