இந்தோனேசியா குத்துச்சண்டை: மேரி கோம் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்!

Web Desk | news18
Updated: July 28, 2019, 8:19 PM IST
இந்தோனேசியா குத்துச்சண்டை: மேரி கோம் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்!
மேரி கோம்
Web Desk | news18
Updated: July 28, 2019, 8:19 PM IST
இந்தோனேஷியாவில் நடைபெற்ற 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பைக் குத்துசண்டைப் போட்டியில் 6 முறை உலக சாம்பயின் பட்டம் வென்ற இந்திய வீராங்கணை மேரி கோம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பைக் குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 51-வது எடைப் பிரிவில் இந்திய வீரங்கனை மேரி கோம் - ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலை எதிர்த்து மோதினார்.

ஆரம்பம் முதலே அசத்தலான பஞ்ச்களை மேரி கோம் பதிவு செய்து வந்தார். மேரி கோமின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிராங் ஏப்ரல் திணறினார். பிராங் ஏப்ரலை எந்த புள்ளியும் எடுக்க விடாமல் 5-0 என்ற நேர்செட்டில் மேரி கோம் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
Loading...கடந்த மே மாதம் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். செப்டம்பர் மாதம் 7 - 21-ம் தேதி வரை உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பட்டம் வென்றால், 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெறுவார்.
First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...