இந்தியாவின் மேரிகோம் உள்பட 7 பேர் தங்கம் வென்று அசத்தல்!

குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோமுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 29, 2019, 10:39 AM IST
இந்தியாவின் மேரிகோம் உள்பட 7 பேர் தங்கம் வென்று அசத்தல்!
மேரிகோம்
Web Desk | news18
Updated: July 29, 2019, 10:39 AM IST
இந்தோனேசியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் உட்பட 7 பேர் தங்கம் வென்று அசத்தினர்.

இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலிடம் மோதினார். இதில் மேரி கோமின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிராங் ஏப்ரல் திணறினார்.

இறுதியில் பிராங் ஏப்ரலை எந்த புள்ளியும் எடுக்க விடாமல் 5-0 என்ற நேர்செட்டில் மேரி கோம் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதேபோன்று சிம்ரன்ஜித் கவுர் உட்பட 6 பேர் தங்கப் பதக்கங்களையும், 2 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர்.
Loading...இதற்கிடையே குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோமுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... அனுமதியின்றி மனைவியை தங்க வைத்த வீரர் இவரே... கோலி - ரோஹித் பிரச்னைக்கும் காரணமும் அதுவே...!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...