mann ki baat | ஆடவர் கிரிக்கெட் அணிக்கும் உத்வேகம் அளிக்கும் மிதாலி ராஜ்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு

mann ki baat | ஆடவர் கிரிக்கெட் அணிக்கும் உத்வேகம் அளிக்கும் மிதாலி ராஜ்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு

பிரதமர் மோடி

மகளிர் கிரிக்கெட் சாதனை வீராங்கனை மிதாலி ராஜ் 10,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த முதல் வீராங்கனை என்பதற்கும் சமீபத்திய சாதனைக்காக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவையும் பிரதமர் நரேந்திர மோடி தன் வானொலி உரை நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார்.

  • Share this:
    மகளிர் கிரிக்கெட் சாதனை வீராங்கனை மிதாலி ராஜ் 10,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த முதல் வீராங்கனை என்பதற்கும் சமீபத்திய சாதனைக்காக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவையும் பிரதமர் நரேந்திர மோடி தன் வானொலி உரை நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 10,000 ரன்களை எடுத்த 2வது வீராங்கனையாவார். இவரையும் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவையும் பிரதமர் மோடி தனது 75வது மனதின் குரல் (மன் கி பாத்), நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். பி.வி.சிந்து சமீபத்தில் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இது தொடர்பாகக் கூறியதாவது:

    மிதாலி ராஜ் 20 ஆண்டுகால தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பலரை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது கடின உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்குமே பெரிய உத்வேகம்தான்.

    மார்ச் மாதத்தில் நாம் மகளிர் தினம் கொண்டாடும் போது பல வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதும், சாதனைகள் படைப்பதும் ஆர்வமூட்டுவதாக உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி டாப்-ல் உள்ளது. தங்கப்பதக்கப் பட்டியலிலும் இந்தியா டாப்-ல் உள்ளது. இதற்குக் காரணம் இந்திய ஆடவர், மகளிர் வீராங்கனைகள் பிரமாதமாக ஆடியதே.

    பி.வி.சிந்துவும் சுவிஸ் ஓபன் சூப்பர் 300-ல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார், என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

    ஐஎஸ் எஸ் எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா மொத்தமாக 27 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது, இதில் 13 தங்கம் வென்றுள்ளது.

    மனதின் குரல் நிகழ்ச்சியில் மேலும் பிரதமர் மோடி கூறும்போது கிறித்துவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார், “இந்தக் காலத்தில் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஈஸ்டரும் கொண்டாடப்படும். ஏசு கிறிஸ்து மரித்தெழுந்த நாள் என்ற வகையிலே ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அடையாளப்படுத்திச் சொன்னால், ஈஸ்டர் என்பது வாழ்க்கையின் புதிய தொடக்கத்தோடு இணைந்தது எனலாம். ஈஸ்டர் எதிர்பார்ப்புக்களுக்கான, மறுவாழ்வுக்கான அடையாளம். இந்தப் புனிதமான, மங்கலமான தருணத்தை முன்னிட்டு, நான் இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது, உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ” என்றார் பிரதமர் மோடி.
    Published by:Muthukumar
    First published: