முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி லீக் 2021-22- பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ‘டை’

புரோ கபடி லீக் 2021-22- பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ‘டை’

புரோ கபடி லீக் 2021-22, தமிழ் தலைவாஸ் டிரா

புரோ கபடி லீக் 2021-22, தமிழ் தலைவாஸ் டிரா

புரோ கபடி லீக் 8வது தொடரின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி 40-40 என்ற புள்ளிகள் கணக்கில் டை செய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புரோ கபடி லீக் 8வது தொடரின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி 40-40 என்ற புள்ளிகள் கணக்கில் டை செய்தது.

இந்தியாவில் புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) தொடரின் 8வது சீசன் நேற்று பெங்களூருவில் துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' பெங்கால், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ், ஐதராபாத் (தெலுங்கு டைட்டன்ஸ்) அணிகள் மோதின. புதிய கேப்டன் சுர்ஜீத் சிங் நார்வல் தலைமையில் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது.

சித்தார்த் தேசாய் தெலுங்கு டைட்டன்ஸுக்காக 11 புள்ளிகள் எடுத்து முன்னிலை கொடுத்தார். ஆனால் தமிழ் தலைவாஸில் கலக்கிய மஞ்சீத் 12 புள்ளிகள் எடுத்து ஆதிக்கம் காட்டினார். இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். ருதுராஜ் கராவியின் இரண்டு அற்புதமான டேக்கிள்கள் மற்றும் ரஜ்னீஷ் எடுத்த புள்ளி மூலம் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணியை 3 வீரர்களுக்குக் குறுக்கியது. பிறகு தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தெலுங்கு அணி 12-6 என்று முன்னிலை பெற்றது.

அப்போதுதான் மஞ்சீத் இருமுறை ஏறி விளையாட்டுக் காட்டியதில் தமிழ் தலைவாஸ் பக்கம் ஆட்டம் திரும்பியது. மஞ்சீத்தின் ஆட்டத்தினால் தெலுங்கு டைட்டன்ஸ் உடன் தமிழ் தலைவாஸ் 20-20 என்று டை செய்தது. இடைவேளையின் போது தமிழ் தலைவாஸ் 23-21 என்று முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் ஐதராபாத்தை 'ஆல் அவுட்' செய்த தமிழ் தலைவாஸ், கடைசி 3 நிமிடம் இருந்த போது 38-29 என முந்தியது. திடீரென சொதப்பிய தமிழ் தலைவாஸ், வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. முடிவில் போட்டி 40-40 என சமனில் முடிந்தது. மன்ஜீத் சிங் அதிகபட்சம் 12 புள்ளி எடுத்தார்.

மற்றொரு போட்டியில் பெங்களூரு, மும்பை பலப்பரீட்சை நடத்தின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி முதல் பாதியில் 24---17 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி 45-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அதிகபட்சம் அபிஷேக் சிங் 18 புள்ளிகள் குவித்தார்.

தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரெய்டுகளுக்கான வீரராக மஞ்சீத் திகழ்ந்தார், சுர்ஜித் சிறந்த தடுப்பாட்ட வீரராக திகழ்ந்தார்.

First published:

Tags: Pro Kabaddi