Home /News /sports /

உலக டேபிள் டென்னிஸில் சத்யன்-பத்ரா ஜோடிக்கு வெள்ளி, சரத்கமலுக்கு வெண்கலப் பதக்கம்

உலக டேபிள் டென்னிஸில் சத்யன்-பத்ரா ஜோடிக்கு வெள்ளி, சரத்கமலுக்கு வெண்கலப் பதக்கம்

உலக டேபிள் டென்னிஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஜோடி

உலக டேபிள் டென்னிஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஜோடி

தோஹா 2022 சாம்பியன்ஷிப்பில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றனர், இதில் அச்சந்தா ஷரத் கமலின் ஒற்றையர் வெண்கலப் பதக்கமும் அடங்கும். சத்யன் - பத்ரா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

    தோஹா 2022 சாம்பியன்ஷிப்பில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றனர், இதில் அச்சந்தா ஷரத் கமலின் ஒற்றையர் வெண்கலப் பதக்கமும் அடங்கும். சத்யன் - பத்ரா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

    உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் கலப்பு இரட்டையர் இறுதி சுற்றில் இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி 4-11, 5-11, 3-11 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் ஜோடியான சீனதைபேயின் செங் சிங்- லின் யுன் ஜூ இணையிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

    ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் தமிழகத்தின் சரத் கமல் 5-11, 11-8, 6-11, 11-7, 11-5, 10-12, 9-11 என்ற செட் கணக்கில் சீனாவின் யுவான் லிசென்னிடம் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் சரத் கமலுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    இரண்டு ஆண்டுகளில் ஷரத்தின் முதல் பதக்கம் இதுவாகும். ஷரத் கமல்2020ல் ஓமன் ஓபன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். போட்டிக்குப் பிறகு ஷரத் கூறுகையில், “வெண்கலம் பெற முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வேகத்தை அடுத்த போட்டியிலும் தொடர்வேன். ஆறாவது ஆட்டத்திலேயே நான் போட்டியை முடித்திருக்க வேண்டும், ஆனால் நான் அதை தவறவிட்டேன்.” என்றார்.



    சீன தைபே ஜோடிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர்.7 கலப்பு ஜோடி தொடக்கம் முதலே சிக்கலை எதிர்கொண்டது. இடது-வலது கை ஜோடியின் சவாலை எதிர்கொண்டு சத்தியன் மற்றும் மாணிகா தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sports

    அடுத்த செய்தி