உலக பாரா பேட்மின்டனில் தங்கம் வென்ற சாதனை மங்கை மானசி!

Web Desk | news18-tamil
Updated: August 28, 2019, 9:04 PM IST
உலக பாரா பேட்மின்டனில் தங்கம் வென்ற சாதனை மங்கை மானசி!
மானசி நயன ஜோஷி
Web Desk | news18-tamil
Updated: August 28, 2019, 9:04 PM IST
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானசி நயன ஜோஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பொறியியல் மாணவியான நயன ஜோஷி சிறுவயதிலிருந்தே பேட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். படிப்பிற்கு பின் வேலைக்கு சென்ற போதும் நிறுவனங்களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டிகளில் விளையாடினார்.

மானசி போக்குவரத்து நெரிசலான சாலையை கடக்கும் போது டிரக் மோதி தனது இடதுகாலை இழந்தார். அதன்பின் செயற்கை காலுடன் நடக்க பயிற்சி எடுத்து கொண்டார். இடதுகாலை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத மானசி மீண்டும் நிறுவனங்களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டியில் விளையாடி தங்கம் வென்றுள்ளார்.


இதனையடுத்து தினமும் உடற்பயிற்சி செய்து உடல்எடை குறைத்தும், பேட்மின்டன் பயிற்சியும் எடுத்துவந்துள்ளார் மானசி. உலக அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்று வந்தார். பாரா உலக பேட்மின்டன் 2019-ல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடினர். ஆனால் அவருக்கு ஒரு நாள் முன் தங்கம் வென்ற மானசியை யாரும் பெருமைப்படுத்தவில்லை என சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Also Watch

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...