Home /News /sports /

பிரக்ஞானந்தாவின் போராட்ட குணம், மன உறுதி, தரம் - உலக சாம்பியன் கார்ல்சன் வியப்பு

பிரக்ஞானந்தாவின் போராட்ட குணம், மன உறுதி, தரம் - உலக சாம்பியன் கார்ல்சன் வியப்பு

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

கிரிக்கெட்டுக்குப் பிறகு இந்தியாவில் செஸ் பிரபலமாகி வருவதையடுத்து உலக சாம்பியனும் கிரிப்டோ செஸ் சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், தன்னை 3 முறை வீழ்த்திய பிரக்ஞானந்தாவின் போராட்டக் குணம், மன உறுதி, தரமான ஆட்டத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Intern, IndiaNorway Norway Norway
கிரிக்கெட்டுக்குப் பிறகு இந்தியாவில் செஸ் பிரபலமாகி வருவதையடுத்து உலக சாம்பியனும் கிரிப்டோ செஸ் சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், தன்னை 3 முறை வீழ்த்திய பிரக்ஞானந்தாவின் போராட்டக் குணம், மன உறுதி, தரமான ஆட்டத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

முதலில் அவர் செஸ், கிரிக்கெட் அல்ல என்பதற்கு 4 காரணங்களை அடுக்குகிறார். ஒன்று, கிரிக்கெட் மைதானத்தில் மனிதர்களால் ஆடப்படுகிறது , செஸ் என்பது போர்டில் மரக்காய்களுடன் ஆடப்படுகிறது.  இரண்டாவது, கிரிக்கெட்டுக்கு மட்டை, பந்து தேவை செஸ்சில் அது இல்லை. மூன்றாவதாக, கிரிக்கெட் ஆட 22 வீரர்கள் தேவை செஸ்ஸிற்கு 2 பேர் போதும். நான்காவதாக, ‘என்னால் கிரிக்கெட் ஆட முடியாது’ என்று கிரிக்கெட்டும் செஸ்ஸும் ஒன்றல்ல என்று காரணம் காட்டியுள்ளார் மேக்னஸ் கார்ல்சன்.

அன்று கிரிப்டோ செஸ் 7வது சுற்றில் பிரக்ஞானந்தா டைபிரேக்கருக்குள் செல்ல விடாமல் வென்றிருந்தால் சாம்பியன் ஆகியிருப்பார், ஆனால் பிரக்னானந்தா பிரதான சுற்றை 2-2 என்று ட்ரா செய்தார், ஆனால் அந்த 2 வெற்றிகளுமே உலக சாம்பியனுக்கு எதிராக சாதாரண ஆட்டமல்ல.  டைப்பிரேக்கருக்குச் சென்றதால் தன் சாம்பியன் பட்டம் உறுதியானதையடுத்து தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன் என்றார் கார்ல்சன்.

Also Read: சில்லுனு மழை.. ஸ்கூட்டரில் ஜாலி ரைடு - விராட் கோலி அனுஷ்கா வைரல் வீடியோ..!

பிரக்ஞானந்தாவும் கார்ல்சன் பற்றி கூறும்போது, ‘அவர் கேளிக்கை விரும்பி’ என்றார்.  கடைசியில் டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று ஒரேயொரு புள்ளி குறைவாகப் பெற்று சாம்பியன் பட்டத்தை தவற விட்டு 2ம் இடம் பிடித்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் கார்ல்சன் பிரக்ஞானந்தா பற்றி விதந்து கூறும்போது, “வெற்றி பெற முழு தகுதி பெற்றவர் பிரக்ஞானந்தா தான். மிகப்பெரிய அளவில் போராட்டக் குணத்தையும், மன உறுதியையும் தரமான செஸ் ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார் பிரக்ஞானந்தா. என்னைப் பொறுத்தவரை முதலிடத்தில் முடிந்ததே போதும் என்று இருந்தேன்” என்று கூறினார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Chess, Praggnanandhaa, Twitter

அடுத்த செய்தி