வருவாய் ஈட்டுவதில் பிரிட்டன் கால்பந்து அணியான லிவர்பூல் உலக சாதனை!

வரி செலுத்துவதற்கு முந்தைய லாபமும், 364 கோடி ரூபாயில் இருந்து 1137 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு லீசெஸ்டர் கிளப் 842 கோடி ரூபாய் வரிக்கு முந்தைய லாபம் ஈட்டியதே சாதனையாக இருந்து வந்தது.

வருவாய் ஈட்டுவதில் பிரிட்டன் கால்பந்து அணியான லிவர்பூல் உலக சாதனை!
லிவர்பூல்
  • News18
  • Last Updated: February 11, 2019, 11:56 AM IST
  • Share this:
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப்பான லிவர்பூல் அணி போட்டிகளில் சாதனை புரிவதுடன் வருவாய் ஈட்டுவதிலும் உலக சாதனை புரிந்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் 1,137 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

உலகின் மிகப்பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்றான, இங்கிலாந்தின் லிவர்பூல் அணி 1892-ல், தொடங்கப்பட்டது. இங்க்லீஷ் பிரீமியர் லீக் எனப்படும் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடும் லிவர்பூல் அணி, இங்கிலாந்து கால்பந்து லீக் அணிகளிலேயே புகழ்வாய்ந்ததாக விளங்குகிறது.

வேறு எந்த இங்கிலீஷ் கால்பந்து கிளப்பும் சாதிக்காத வகையில் ஐரோப்பிய கோப்பையை லிவர்பூல் ஐந்து முறை வென்றுள்ளது. கால்பந்து மைதானத்தில் சாதனைகளை புரிந்தது மட்டுமின்றி இந்த ஆண்டு ஒரு படி மேலே போய், இந்திய மதிப்பில் 1137 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து லிவர்பூல் அணி உலக சாதனை புரிந்துள்ளது.


சாம்பியன்ஸ் லீக் கோப்பை இறுதிப்போட்டியை எட்டியதன் மூலம் மட்டும் 656 கோடி ரூபாயை லிவர்பூல் அணி சம்பாதித்தது. மேலும், பிரேசிலைச் சேர்ந்த பிரபல வீரரான பிலிப் கோடின்ஹோ (PHILIPPE coutinho), லிவர்பூல் அணியில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா கிளப்புக்கு மாறியபோது மட்டும் லிவர்பூல் நிர்வாகத்திற்கு 1293 கோடி ரூபாய் கைமாறியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பிரீமியர் லீகிலும் லிவர்பூல் இந்த ஆண்டு பிரகாசித்து வருகிறது. நடப்பு சாம்பியனான மான்செஸ்டருடன் இறுதிப்போட்டியில் ஆட வாய்ப்பு அதிகரித்துள்ளதால் இதி்லும் பணம் கொட்டுகிறது.

இவ்வாறாக அந்த அணியின் வருவாய் 2018 மே மாதம் வரையிலான 12 மாதங்களில், 819 கோடி ரூபாயில் இருந்து 4,140 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் இத்தகைய வருவாய் உயர்வு ஓர் உலக சாதனையாகும்.இதுபோல், வரி செலுத்துவதற்கு முந்தைய லாபமும், 364 கோடி ரூபாயில் இருந்து 1137 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு லீசெஸ்டர் கிளப் 842 கோடி ரூபாய் வரிக்கு முந்தைய லாபம் ஈட்டியதே சாதனையாக இருந்து வந்தது.

லிவர்பூல் அணியினரும் நிர்வாகமும் பணமழையிலும், புகழ்மழையிலும் நனைவது வரும்நாட்களிலும் தொடரும்.

Also see...

First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்