ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பலன் டி ஒர்(Ballon d'Or) விருது வழங்கப்டுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பாலன் டி ஓர் விருது 2020 ஆம் ஆண்டு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
பாரிஸில் நேற்று நடந்த விழாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலகின் முன்னணி கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி இந்த விருதை 7 வது முறையாக தட்டிச்சென்றார். இந்த விருதை, இறுதியாக 2019 ஆம் ஆண்டில் மெஸ்ஸி வென்று இருந்தார்.
முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு பலூன் டோ விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருதை வென்றார். பின்னர் 2015 ஆம் ஆண்டு 5 வது முறையாக அவர் பாலன் டி ஓர் விருதை வென்றார்.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இந்த ஆண்டு நடைபெற்ற 15 வது கோபா அமெரிக்கா கால்பந்து பட்டத்தை 28 ஆண்டுகளில் முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது, வழிநடத்திச் சென்ற மெஸ்ஸி முதல் முறையாக கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார். அந்த சீசனில் 613 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்ததையடுத்து, அவருக்கு விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட மெஸ்ஸி கிரேட் பிளேயர் என்றால்...
ஆடவர் பிரிவில் 2-வது இடத்தை 580 புள்ளிகளுடன் பேயர்ன் முன்சி அணியின் போலந்து ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவான்டோவ்ஸ்கி பெற்றார். 33 வயதான லாவான்டோவ்ஸ்கி ஒரே சீசனில் பண்டெஸ்லிகா அணிக்காக 41 கோல்கள் அடித்தார். ஜெர்மனி ஜாம்பவான் ஜெர்ட் முல்லரின் சாதனையையும் லாவான்டோவ்ஸ்கி முறியடித்தார்.
செல்ஸி அணியின் மிட்பீல்டர் ஜோர்ஹின்ஹோ 460 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் லண்டன் கிளப் அணியான செல்ஸி வெல்வதற்கு ஜோர்ஹின்ஹோ முக்கியக் காரணமாக அமைந்தார்.
விருது வென்ற பின் லியோனல் மெஸ்ஸி கூறியதாவது :
நான் எப்போது ஓய்வு பெறப் போகிறேன் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கத் தொடங்கினர். ஆனால் இப்போது நான் இங்கே இந்த விருதை பெற்று கொண்டு நிற்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என எனக்கு தெரியவில்லை.
அர்ஜென்டினா அணிக்கு கோபா அமெரிக்கா கோப்பையை பெற்று தந்ததன் மூலம் என்னுடைய கனவு நினைவானது. அதை எனது சக வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.