Lionel Messi: ‘திரும்ப வரப்போவதில்லை’: கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி

மெஸ்ஸி

பார்சிலோனா அணியில் இருப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் தனது ஊதியத்தில் 50 சதவீதத்தை குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் மெஸ்ஸி தெரிவித்தார்.

  • Share this:
    பார்சிலோனா அணிக்காக திரும்பவும் தான் விளையாடப் போவதில்லை என்பதை பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி கண்ணீர் மல்க அறிவித்தார்.

    கால்பந்தாட்டில் மாபெரும் ஜாம்பவனாக திகழ்பவர் அர்ஜெண்டியாவைச் சேர்ந்த  லியோனல் மெஸ்ஸி.   34 வயதான மெஸ்ஸி இதுவரை பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாட்டி வந்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்ததோடு மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    கடந்த 2000ம் ஆண்டில் பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி  21 ஆண்டுகள்  அதற்காக விளையாடி வந்துள்ளார். 6 முறை  பலோன் டி’ஓர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.  தற்போது பார்சிலோனா கிளப்பில் இருந்து  மெஸ்ஸி விலகியுள்ளார். இதனை பார்சிலோனா கிளப் உறுதிப்படுத்தியிருந்தது. இந்நிலையில்,  இந்த வெளியேற்றம் தொடர்பாக  செய்தியாளர்களை மெஸ்ஸி இன்று சந்தித்தார்.

    அப்போது, பார்சிலோனா கிளப்பில் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசிவரை  அணிக்காக அனைத்தையும் தான் வழங்கியுள்ளதாகவும்,  ‘குட் பை’ சொல்லும்  சூழல் வரும் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார். அணியில் உடன் விளையாடிய வீரர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.

    13 வயதில் இருந்து இங்கு இருப்பதாகவும் தற்போது 21 ஆண்டுகள் கழித்து தனது குழந்தைகள்,மனைவி ஆகியோருடன் பார்சிலோனாவிலிருந்து செல்வதாக கூறிய மெஸ்ஸி ஒருக்கட்டத்தில் தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்தினார்.

    தனது பெயரை உற்சாகமாக கூச்சலிடும் ரசிகர்கள் தற்போது இங்கே இல்லாதது கவலை அளிப்பதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை பார்க்க முடியாத சூழலில் தற்போது விடைபெறுவதாகவும் மெஸ்ஸி கூறினார்.

    நெய்மருடன் மெஸ்ஸி


    ஊதியத்தை 50% குறைக்க  ஒப்புக்கொண்டேன்

    பார்சிலோனா அணியில் இருப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் தனது ஊதியத்தில் 50 சதவீதத்தை குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்த மெஸ்ஸி, 30 சதவீதம் கூடுதலாக தான் ஊதியம் கேட்டதாக கூறப்படுவது பொய் என்றும் தெரிவித்தார்.

    ‘எங்களுக்கு சில நல்ல நேரங்களும் சில கெட்ட நேரங்களும் இருந்தன, ஆனால் மக்கள் என்னிடம் காட்டிய அன்பு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது’ என்றும் மெஸ்ஸ்லி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ள மெஸ்ஸி இதுவரை 10 லீக் பட்டங்கள், 4 முறை சாம்பியன் லீக், 3 முறை கிளப்புகளுக்கு இடையேயான உலக கோப்பை ஆகியவற்றை வென்றுகொடுத்துள்ளார்.  அடுத்து எந்த கிளப்பில் மெஸ்ஸி இணைவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், பாரிஸ் செயிண்ட்- ஜெர்மெய்ன் அணியில் விளையாட ஒப்பந்தம் முடிவாகி உள்ளதக ஈ.எஸ்.பி.என். ஊடகம் தெரிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published: