ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

”ஆல் ஏரியாவுலயும் கில்லி டா” கால்பந்து வரலாற்றில் சாதனை படைத்த மெஸ்ஸி!

”ஆல் ஏரியாவுலயும் கில்லி டா” கால்பந்து வரலாற்றில் சாதனை படைத்த மெஸ்ஸி!

கோல் அடித்த மகிழ்ச்சியில் மெஸ்ஸி

கோல் அடித்த மகிழ்ச்சியில் மெஸ்ஸி

உலகக் கோப்பையில் அனைத்து வகையான போட்டிகளில் கோல் அடித்து மெஸ்ஸி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி போட்டியில் அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. முதல் பாதி முடிவதற்குள் அர்ஜெண்டினா அணி 2 கோல்களை அடித்து முன்னிலையில் உள்ளது.

முதல் பாதியின் 23 வது நிமிடத்தில் மெஸ்ஸி முதல் கோலை அடித்து அசத்தினார். இதனையடுத்து 36 வது நிமிடத்தில் டி மரியா அடுத்த கோலை அடித்து அர்ஜெண்டினா அணியை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தனர்.

இந்த நிலையில் 23வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் மூலம் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை தொடரில் லீக் சுற்று, நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டியில் கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.

First published:

Tags: FIFA World Cup 2022