முகப்பு /செய்தி /விளையாட்டு / இறந்தாலும் விடாது துரத்தும் செக்ஸ் புகார்- மரடோனா மீது பெண் பகீர் குற்றச்சாட்டு

இறந்தாலும் விடாது துரத்தும் செக்ஸ் புகார்- மரடோனா மீது பெண் பகீர் குற்றச்சாட்டு

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீது பாலியல் புகார்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீது பாலியல் புகார்

மறைந்த கால்பந்து வீரர் டீகோ மரடோனாவின் முன்னாள் தோழி அவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

  • Last Updated :

கியூபா நாட்டை சேர்ந்த பெண்ணான மேவிஸ் ஆல்வாரெஸ் அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றத்தில் கடத்தல் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில் தன்னுடைய 16ம் வயதில், மறைந்த கால்பந்து வீரர் மரடோனாவுடன் பழகி வந்ததாகவும், அந்நாட்களில், மரடோனா தன்னை கட்டாய பாலுறவுக்கு வற்புறுத்தியதாகவும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் பியூனஸ் அய்ரஸ் நகரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மறைந்த கால்பந்து ஜாம்பவான் மீது இத்தகைய பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். .

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் 37 வயதான மேவிஸ் ஆல்வாரெஸ், கியூபாவில் நடந்த சம்பவங்களை பிடல் காஸ்ட்ரோவின் அரசாங்கமும் மரடோனாவின் நெருங்கிய கூட்டாளிகளும் மறைத்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா இறந்துவிட்ட நிலையில், அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான முன்னாள் மேலாளர் மற்றும் அர்ஜெண்டினாவை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரிடம் ஆல்வாரெசின் வழக்கறிஞர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மரடோனாவின் நெருங்கிய நட்பு வட்டாரம் மறுத்துள்ளது.

இதையும் படிங்க: Rahul Dravid| நியூசிலாந்து வீரர்களை மனிதாபிமானத்துடன் பார்க்கும் ராகுல் திராவிட்

மரடோனா தான் கொகைன் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காக கியூபாவில் சில வருடங்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின், நவம்பர் 2001ம் ஆண்டு மரடோனா அர்ஜெண்டினாவுக்கு பயணித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஆல்வாரெசும் அர்ஜெண்டினாவுக்கு பயணித்துள்ளார். அதன்பின், ஆல்வாரெஸ் அங்கு அழகுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கான்பூர் டெஸ்ட் : இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?

top videos

     எனினும், அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றம் இதுவரை அவருடைய குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவை இன்னும் எடுக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்ய பத்திரிகையாளர் காத்தரீனா நடோல்ஸ்கயா என்ற பெண்ணும் மரடோனா தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Argentina, Football