கொரியா ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய பெண் பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து மற்றும் ஆடவர் அரையிறுதிக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புசனன் ஓங்பாம்ருங்பன் உடன் மோதினார்.
43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-10, 21-16 என்ற செட் கணக்கில் புசனன் ஓங்பாம்ருங்பனை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,தென் கொரியாவின் சன் வன்ஹோ ஆகியோர் மோதினர்
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் கைப்பற்ற, 2-வது செட்டை சன் வன்ஹோ கைப்பற்றினார் .இதனால் பரபரப்பான 3வது செட்டை சிறப்பாக விளையாடி ஸ்ரீகாந்த் கைப்பற்றினார்
இதனால் 21-12, 18-21, 21 -12 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று ,அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற மூன்றாவது நிலை வீராங்கனையான சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 21-10 21-16 என்ற கணக்கில் பழக்கமான எதிரியான தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானிடம் 17வது வெற்றியைப் பெற்றார்.
அவர் அடுத்ததாக ஜப்பானின் சயினா கவாகாமி அல்லது இரண்டாம் நிலை வீராங்கனையான கொரிய அன் செயோங்கை எதிர்கொள்கிறார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்ததாக தாய்லாந்தின் எட்டாம் நிலை வீரரான குன்லவுட் விடிட்சார்ன் மற்றும் மூன்றாம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டி ஆகியோருக்கு இடையிலான போட்டியில் வெல்பவரை எதிர்கொள்வார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.