Home /News /sports /

பிரமாதமான ஸ்மேஷ்கள், வலைக்கருகே அபார ஆட்டம்: காலிறுதியில் பி.வி.சிந்து

பிரமாதமான ஸ்மேஷ்கள், வலைக்கருகே அபார ஆட்டம்: காலிறுதியில் பி.வி.சிந்து

கொரியா ஓபன் காலிறுதியில் சிந்து

கொரியா ஓபன் காலிறுதியில் சிந்து

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரின் பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியுடன் மோதினார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-15, 21-10 என்ற செட் கணக்கில் ஒஹோரியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இஸ்ரேல் வீரர் மிஷா ஷில்பெர்மனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-18, 21-6 என்ற செட் கணக்கில் ஷில்பெர்மனை வீழ்த்திய ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இருப்பினும், BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 500 போட்டித் தொடரான இந்த கொரிய ஓபன் தொடரில்  இருந்து இந்திய ஷட்லர்களான லக்ஷ்யா சென் மற்றும் மாளவிகா பன்சோட் ஆகியோர் வெளியேறினர்.

உலக எண். 7 சிந்து உலக நம்பர் -26 வீராங்கனையான ஒஹோரியை வீழ்த்த கஷ்டப்பட வேண்டியதில்லாமல் போனது, இரண்டு கேம்களிலும், அவர் ஆரம்பத்தில் இருந்தே தனது போட்டியாளரை ஆதிக்கம் செலுத்தினார், மேலும் அவருக்கு மீண்டும் எழுவதற்கான எந்த வாய்ப்பையும் சிந்து கொடுக்கவில்லை.

சிந்து ஓஹோரியை வெளியேற்றுவதற்கு சக்திவாய்ந்த ஸ்மாஷ்களையும்,  வலைக்கருகே வந்து சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். இன்னுமொரு வெற்றியின் மூலம், அவர் ஜப்பானியர்களுக்கு எதிராக தனது நேருக்கு நேர் வெற்றி எண்ணிக்கையை 12-0  வலுவாக வைத்துள்ளார்.

இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் கொரியா ஓபன் காலிறுதிப் போட்டியில்  தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானுடன் மோதுகிறார்.

ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை கொரியாவின் சன் வான்ஹோவுடன் மோதுகிறார்.

வியாழன் அன்று சன்சியோனில் உள்ள பால்மா ஸ்டேடியத்தில் நடந்த கொரியா ஓபன் காலிறுதிக்கு ஆண்கள் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
Published by:Muthukumar
First published:

Tags: Badminton, PV Sindhu

அடுத்த செய்தி