29 ஆண்டுகால உலக சாதனை உடைந்தது: 400மீ தடை ஓட்டத்தில் நார்வே தடகள வீரர் அபாரம்

கார்ஸ்டன் வார்ஹோம்.

400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் கார்ஸ்டென் வார்ஹோம் உலக சாதனை புரிந்தார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் தடகள வீரர்களுக்கு சவால் விட்டுள்ளார் கார்ஸ்டென் வார்ஹோம்.

 • Share this:
  ஆஸ்லோவில் நடைபெறும் டயமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடர் 400 மீ தடை ஓட்டத்தில் 46.70 விநாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனை நிகழ்த்தினார் கார்ஸ்டன்.

  அதாவது 1992-ல் 29 ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்காவின் கெவின் யங் இதே 400 மீ தடை ஓட்டத்தில் 46.78 விநாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனை புரிந்திருந்தார், அதை இப்போது நார்வே வீரர் கார்ஸ்டன் உடைத்தார்.

  ஆஸ்லோவின் பிரபல பிஸ்லெட் ஸ்டேடியத்தில் 5,000 நார்வே ரசிகர்கள் கரகோஷம் செய்த உற்சாகத்தில் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார் கார்ஸ்டென் வார்ஹோம்.

  Also Read: England vs Sri Lanka ODI: ‘ஜெயிப்பேன் என்று நினைத்தாயா?’ - பரிதாப இலங்கை மீண்டும் தோல்வி

  “என் உடலில் வேகமாக ஓடுவதற்கான நேரமும் ஆற்றலும் இருப்பதை உணர்ந்தேன். இதுதான் இந்தச் சாதனையை நிகழ்த்த சரியான தருணமும் கூட. அனைவரும் பல ஆண்டுகள் உடைக்காத உலக சாதனை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். என்னிடம் முறியடிக்கும் திறமை இருப்பதாக நம்பினேன், ஆனாலும் அதைச் செய்வது என்பது சிறப்பு வாய்ந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 100மீ, 200 மீ ஓட்டம் போ 400 மீ தடகளத்துக்கும் சிறப்பு கவர்ச்சி உண்டு.

  ஆனால் வார்ஹோமுக்கு சுலபமல்ல, அங்கு அமெரிக்க வீரர் ராய் பெஞ்சமின் இவருக்கு சவால் அளிக்கத் தயாராக இருக்கிறார். இவர் 46.83 விநாடிகளில் இலக்கை அடைந்து என்று கொஞ்சம் அருகில்தான் உள்ளார். ஆனால் இதற்கு முன்னரே ஜூலை 9ம் தேதி உலக சாதனையாளர் கார்ஸ்டனும், ராய் பெஞ்சமினும் மொனாகோவில் ஒரு போட்டியில் சந்திக்கின்றனர். கத்தார் வீரர் அப்துர்ரெஹ்மானும் போட்டியில் உள்ளார்.
  Published by:Muthukumar
  First published: