Home /News /sports /

90மீ தூரம் எறிவேன்: இன்று பின்லாந்தில் ஜாம்பவான்களுடன் மோதும் நீரஜ் சோப்ரா

90மீ தூரம் எறிவேன்: இன்று பின்லாந்தில் ஜாம்பவான்களுடன் மோதும் நீரஜ் சோப்ரா

பத்ம ஸ்ரீ நீரஜ் சோப்ரா

பத்ம ஸ்ரீ நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகன் நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக தன்னை தீவிரமாகத் தயாரித்துக் கொண்டு வருகிறார். அதே வேளையில் இன்று பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் ஈட்டி எறிதல் ஜாம்பவான்களுடன் போட்டியில் களமிறங்குகிறார் நீரஜ்.

மேலும் படிக்கவும் ...
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகன் நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக தன்னை தீவிரமாகத் தயாரித்துக் கொண்டு வருகிறார். அதே வேளையில் இன்று பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் ஈட்டி எறிதல் ஜாம்பவான்களுடன் போட்டியில் களமிறங்குகிறார் நீரஜ்.

    டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இவர் 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து அதிசயிக்க வைத்தார், உலக சாம்பியன்ஷிப்பில் 90மீ தூரம் எறிவதை குறிக்கோளாகக் கொண்டு இப்போது தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    மிகவும் ரிலாக்ஸாக இருக்கும் நீரஜ் சோப்ராவின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. பேஸ்பால் தொப்பியை திருப்பி அணிந்து கொண்டிருந்த நீரஜ் சோப்ரா, நீண்ட தூர ஓட்ட ஜாம்பவானும் 9 ஒலிம்பிக் கோல்டு மெடல் வென்றவருமான பின்லாந்து லெஜண்ட் பாவோ நூர்மியின் மிகப்பெரிய போஸ்டர் மற்றும் கட் அவுட்டுக்கு முன்னால் நீரஜ் சோப்ரா நின்று கொண்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானது.

    இன்று ஜூன் 14ம் தேதி துர்க்குவில் World Athletics Continental Tour Gold போட்டியில் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 2017 உலக ஈட்டி எறிதல் சாம்பியன் ஜொஹான்னஸ் வெட்டர் ஆகியோருடனும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4ம் இடம் வந்த ஜூலியன் வீபருடனும் தங்க மகன் நீரஜ் சோப்ரா களம் காண்கிறார்.

    கிரெனெடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இப்போது உலக ஈட்டி எறிதல் சாம்பியன் இவர் 93.27 மீ தூரம் விட்டெறிந்து கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற டயமண்ட் லீகில் சாதனை படைத்தார், இவர்தான் துர்க்குவிலும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக் நாட்டு வீரர் ஜேகப் வாட்லியிச் 90 மீ தாண்டி விட்டு எறிபவர்தான். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் விட்டெறிந்து தங்கம் வென்றார், அப்போது இப்போதைய உலக சாம்பியன் ஆன ஆண்டர்சன் பீட்டர்ஸ் இறுதிக்குத் தகுதி பெறவில்லை.

    இந்த நிலையில் 90 மீ பட்டியலில் தன் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார் நீரஜ் சோப்ரா.

    “நான் 90மீ இலக்கு வைத்துள்ளேன் முதல் போட்டியில் இதை செய்வேனா என்று தெரியாது, ஆனால் இந்த ஆண்டுக்குள் இதை இலக்காக வைத்திருக்கிறேன், என்னால் சிறந்ததை செய்ய விரும்புகிறேன், ஈட்டி எறிதலில் போட்டி அதிகமாகியுள்ளது. தட்பவெப்ப சூழ்நிலை முக்கியம். வெட்டர் 97.76 மீ தூரம் விட்டெறிந்துள்ளார். நான் இதை முறியடிக்கப் போராடவில்லை, மாறாக 90மீ கிளப்பில் இணைய வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வேன்.

    2 வாரங்களில் 3 போட்டிகள் உள்ளன, அதற்கான உடல் தகுதியுடன் நான் இருப்பது அவசியம். ஆனால் போட்டிகளில் முழுவீச்சில் எறிய வேண்டும். அப்போதுதான் சீசன் முழுதும் நான் நன்றாக வீச முடியும்” என்றார் நீரஜ் சோப்ரா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India olympics gold, Neeraj Chopra

    அடுத்த செய்தி