மெரினா கடற்கரையை சென்னையின் எப்.சி. கால்பந்தாட்ட அணி வீரர்கள் தூய்மைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 2014ஆம் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னையின் எப்.சி. என்ற கால்பந்தாட்ட அணி விளையாடுகிறது. இதன் உரிமையாளர்களாக தோனி, நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
இந்நிலையில் அணியில் இடம்பெற்றுள்ள எட்வின், சங்வான், டுகர், கரிகாரி உள்ளிட்ட வீரர்கள் தலைமை பயிற்சியாளர் ப்ரெட்ரிக், துணை பயிற்சியாளர் ஜர்மதியுடன் இணைந்து சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தினர்.
இதுகுறித்து அணியின் கேப்டன் அனிருத் தாபா கூறுகையில், ‘கடற்கரையை தூய்மைப்படுத்துவதன் மூலம் இந்த பூமிக்கு எங்களால் ஆன சிறிய பங்களிப்பை செய்கிறோம்.
இதனை எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம்’ என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Football, ISL Football League