ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பி.டி. உஷா…

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பி.டி. உஷா…

பிரதமர் மோடியுடன் பி.டி. உஷா

பிரதமர் மோடியுடன் பி.டி. உஷா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று பி.டி. உஷா 4 தங்கம் மற்றும் 7 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.டி. உஷா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. பி.டி. உஷா தனது பதிவில், ‘மரியாதைக்குரிய பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினேன். அவரது தலைமைப் பண்பு மற்றும் நாட்டிற்கான சேவை ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பி.டி. உஷாவுக்கு கிடைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பாக். முன்னாள் கேப்டன்…

இதேபோன்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பொறுப்பு நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இந்த மாதத்திற்குள் தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தால், சங்கத்தை சஸ்பெண்டட் செய்து வைப்போம் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை செய்திருந்தது.

‘ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்’ – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து

இந்நிலையில் கடந்த வாரம் பி.டி. உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் தடகள வீராங்கனைகளில் ஒருவராக பி.டி. உஷா இருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று பி.டி. உஷா 4 தங்கம் மற்றும் 7 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

First published:

Tags: Modi