இன்டெர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து: இந்தியா - சிரியா மோதிய போட்டி டிரா

Intercontinental cup 2019 - India vs Syria Foot Ball Match | நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் வடகொரிய அணிகள் மோதுகின்றன.

news18
Updated: July 17, 2019, 8:45 AM IST
இன்டெர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து: இந்தியா - சிரியா மோதிய போட்டி டிரா
சுனில் சேத்ரி
news18
Updated: July 17, 2019, 8:45 AM IST
இந்தியா - சிரியா மோதிய காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இந்தியா, தஜிகிஸ்தான், வட கொரியா மற்றும் சிரியா என்று நான்கு அணிகள் மோதுகின்றன.

தஜிகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய அணிகளுக்கு எதிரான தனது முதல் இரு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நேற்று தனது மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி சிரியாவை எதிர்கொண்டது.


முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. லீக் போட்டி என்பதால் பெனால்டி முறை பின்பற்றப்படவில்லை.

நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் வடகொரிய அணிகள் மோதுகின்றன.
First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...