கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் நடைபெறும் ஆசிய 17 வயதுக்குட்பட்டோர் மல்யுத்தப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கம் ஒரு வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.
முஷ்கன் (40கிலோ), சுருதி (46கிலோ), ரீனா (52கி), சவிதா (61கி) ஆகியோர் அட்டகாசமாக ஆடி தங்கம் வெல்ல, மன்சி பதனா (69கி) வெண்கலம் வென்றார்.
கிரீக்கோ-ரோமன் பிரிவில் ரோனித் சர்மா (48கிலோ), தங்கம் வென்றார். 110 கிலோ எடைப்பிரிவி பிரதீப் சிங் மற்றும் மோஹித் கோகர் (80கி) வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
பெண்கள் மல்யுத்தத்தின் ஐந்து எடைப் பிரிவுகளிலும், ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் மூன்று எடைப் பிரிவுகளிலும் மீதமுள்ள போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும். ஜூன் 26ம் தேதி போட்டிகள் முடிவடைகின்றன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.