• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 47 பதக்கங்கள் வென்று அசத்திய இந்திய பாரா-பேட்மிண்டன் அணி- பதக்கப் பட்டியல்

47 பதக்கங்கள் வென்று அசத்திய இந்திய பாரா-பேட்மிண்டன் அணி- பதக்கப் பட்டியல்

பதக்கங்களைக் குவித்த இந்திய பாரா பாட்மிண்டன் டீம்.

பதக்கங்களைக் குவித்த இந்திய பாரா பாட்மிண்டன் டீம்.

உகாண்டாவில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணியினர் 47 பதக்கங்களை வென்றனர்.

  • Share this:
    உகாண்டா தலைநகர் கம்பாலாவில் பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் பெற்று அசத்தினர். பாலக் கோலி, அபு ஹுபைதா மற்றும் அம்மு மோகன் ஆகியோர் தலா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். மானசி ஜோஷி மகளிர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் தங்கம் வென்றார்.

    தங்கம் வென்றவர்கள்: மனோஜ் சர்க்கார், சுகந்த் கதம், ஹர்திக் மக்கர், அபு ஹுபைதா, தினகரன், பாலக் கோலி, மானசி ஜோஷி, ஜோதி, அம்மு மோகன், அர்வாஸ் அன்சாரி, தீப் ரஞ்சன், சிராக் பரேத்தா, ராஜ் குமார், மந்தீப் கவுர், ருத்திக், சிவராஜன் ஆகிய வீரர்கள் தங்கம் வென்றனர்.

    டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், ஆடவர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான இரட்டையர் எஸ்எல்3-எஸ்எல்4 போட்டியில் மனோஜ் சர்க்காருடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பின்னர் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 போட்டியில் பாலக் கோலியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    வெள்ளிப்பதக்கம் வென்றவர்கள்:

    பிரமோத் பகத், நீலேஷ் கெய்க்வாட், சிராக் பரேத்தா, சஞ்சீவ் குமார், சிவராஜன், சந்தியா, பருல் பார்மர், பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார், ருத்திக் அண்ட் கரன், பரூல் பார்மர் மற்றும் வைஷாலி படேல், பாலக் கோலி-பிரமோத் பகத், ஷஷாங்க் குமார்-அம்மு மோகன். தினகரன், பிரேம் ஆலே, அபு ஹுபைதா..

    இதையும் படிங்க: ரகானே இந்திய அணியில் இருப்பதே அதிர்ஷ்டம்- கம்பீர் சாடல்

    வெண்கலம் வென்றவர்கள்:

    நிதேஷ் குமார், உமேஷ் விக்ரம், தேவ் ரதி, ருத்திக், ஆர்த்தி படேல், மந்தீப் கவுர், சரஞ்ஜீத் கவுர், சுகந்த்-நிதேஷ், உமேஷ் விக்ரம்-பிரேம் குமார், சுமித் கார்க், ஹர்திக் மாக்கர், சரஞ்ஜித்-ஜோதி, மானசி-சந்தியா, ராஜ்குமார்-பரூல், கரன் - அமுதா, ஷகாஜன் புல்புல், எஸ்.நீரஜ், பிரேம் ஆலே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: