Home /News /sports /

இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்- ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பையில் முதலிடம்

இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்- ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பையில் முதலிடம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜெர்மனியின் சுஹ்லில் புதன்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மூன்று தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றது.இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்குச் சென்றது.

    ஜெர்மனியின் சுஹ்லில் புதன்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மூன்று தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றது.இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்குச் சென்றது.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இறுதி வெளியேற்றுதல் சுற்று முடிவில் இந்திய வீரர்கள் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 260.9 புள்ளிகளுடனும், அபினவ் ஷா 257.7 புள்ளிகளுடனும் இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர்.

    விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 17-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அபினவ் ஷா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஜெர்மனி வீரர் நில்ஸ் பால்பெர்க் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரிமிதா 8-16 என்ற புள்ளி கணக்கில் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான பிரான்சின் ஓசியன் முல்லெரிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

    ரிமிதா வெள்ளிப் பதக்கம் வென்றதால், நாள் முடிவில் இந்தியாவின் எண்ணிக்கை மொத்தம் 12 பதக்கங்களில் மூன்று தங்கம் மற்றும் 4 வெள்ளி என இருந்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sports

    அடுத்த செய்தி