49 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி!

49 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி!

ஒலிம்பிக் ஹாக்கியில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. குரூப் ‘ஏ’வில் 2ம் இடம் பிடித்த இந்திய அணியும், குரூப் ‘பி’யில் 3ம் இடம் பிடித்த பிரிட்டன் அணியும் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் தில்பிரீத் சிங், முதல் கோலை அடித்தார்.

    தொடர்ந்து 2வது பாதியில் தொடக்கத்திலே குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். இதையடுத்து, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து. தொடர்ந்து, பிரிட்டன் அணி ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

    Also read: ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை.. இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்

    2வது கோல் அடிக்கும் பிரிட்டன் அணியின் முயற்சிகளுக்கு இந்திய அணி முட்டுக்கட்டைப் போட்டது. அதேபோல், பிரிட்டன் அணியினரும் இந்திய அணியை கோல் அடிக்க விடாமல் விவேகம் காட்டினர்.

    தொடர்ந்து, ஆட்டம் முடியும் தருவாயில் இந்திய அணி வீரர் ஹர்திக் சிங் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. ஆனால், அப்போது அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவில்லை. நேரடியாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றிருந்தது. அதற்கு முன்னதாக, 1972ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் அரையிறுதியில் இந்திய அணி விளையாடியிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது மீண்டும் அரையிறுதிப்போட்டியில் விளையாடுவதன் மூலம், 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரையிறுதி சுற்றுக்கு இந்திய ஆடவர் அணி முன்னேறியுள்ளது. ஆகஸ்டு 3ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
    Published by:Esakki Raja
    First published: