பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு அதன் தடகள வீரர்கள் ஆடுவதும் தெரியாது, பதக்கம் வெல்வதும் தெரியாது என்று அந்த நாட்டு பத்திரிகையாளர் சில நாட்களுக்கு முன்பு நம் பிரதமர் மோடியை பாராட்டுமுகமாகத் தெரிவித்ததை நிரூபிக்கும் விதமாக அந்த நாட்டு அரசியல் கருத்தாளர் ஒருவர் பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் நதீம் அர்ஷத்தைப் பாராட்டுகிறேன் பேர்வழி என்று நீரஜ் சோப்ராவை மட்டம்தட்டப் போய் அது அவருக்கே இழிவாக முடிந்தது, காரணம் நீரஜ் சோப்ராவை அவர் ஆஷிஷ் நெஹ்ரா என்று குறிப்பிட நெட்டிசன்கள் விலாநோகச் சிரித்து கேலி மழை பொழிந்தனர்.
சேவாக் தான் இதனை முதலில் கண்டுப்பிடித்தார். ’ஆமாம், ஆஷிஷ் நெஹ்ரா ஜாவ்லின் த்ரோ போட்டார், இப்போது பிரிட்டன் பிரதமருக்காக போட்டியிடுகிறார் என்று செம நக்கல் அடிக்க, நெட்டிசன்களும் சேர்ந்து கொண்டனர்:
Chicha, Ashish Nehra is right now preparing for UK Prime Minister Elections. So Chill 🤣 pic.twitter.com/yaiUKxlB1Z
— Virender Sehwag (@virendersehwag) August 11, 2022
பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கருத்தாளர் செய்த் ஹமீத், “இந்த பாகிஸ்தான் வீரரின் வெற்றி மிகவும் இனிமை ஏனெனில் இந்திய ஜாவ்லின் த்ரோயர் ஆஷிஷ் நெஹ்ரா சாதனையை சிதைத்தது கடந்த போட்டியில் நதீமை ஆஷிஷ் நெஹ்ரா தோற்கடித்தார், இது ஒரு இனிய பழிவாங்கல்” என்று கருத்து தெரிவித்து தமாஷுக்குள் மாட்டிக்கொண்டார். நீரஜ் சோப்ராவுக்குப் பதில் ஆஷிஷ் நெஹ்ராவை அவர் குறிப்பிட்டு தன் அறியாமையை வெளிப்படுத்தியது நெட்டிசன்கள் மத்தியில் பேரிய காமெடியாகி விட்டது.
அதாவது காமன்வெல்த் போட்டிகளில் அவர் நாட்டு வீரர் நதீமைப் பாராட்டுகிறேன் என்று அறியாமையை வெளிப்படுத்தி கடும் கேலி மழையில் நனைந்தார்.
சேவாக் இதனைக் கண்டுப்பிடித்து பகிர்ந்து ஆமாம் ஆஷிஷ் நெஹ்ரா ஜாவ்லின் த்ரோயர், இப்போது பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று கிண்டலடிக்க நெட்டிசன்கள் கோரஸில் இணைந்து பாகிஸ்தான் கருத்தாளர் செய்த் ஹமீதை வாட்டி எடுத்து விட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.