வரலாறு படைத்தது இந்திய கால்பந்து அணி: ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தொடர்ந்து 2வது முறையாகத் தகுதி
வரலாறு படைத்தது இந்திய கால்பந்து அணி: ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தொடர்ந்து 2வது முறையாகத் தகுதி
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்துக்குத் தகுதி
பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனம் வென்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது, காரணம் இதுவரை ஏஎப்சி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு முறை தொடர்ச்சியாக தகுதி பெற்றதில்லை. எனவே இது ஒரு புதிய வரலாறு, ஒரு புதிய சாதனை.

ஆசியாவின் மிகப்பெரிய கான்டினென்டல் கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்குபெறுவது இது ஐந்தாவது முறையாகும்.1964, 1984, 2011, 2019ம் ஆண்டுகளில் தகுதி பெற்ற இந்திய கால்பந்து அணி இப்போது 2023 ஆசியக் கோப்பைக்கும் தொடர்ச்சியாக 2வது முறை தகுதி பெற்றுள்ளது.
அடுத்தடுத்து ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு அவசியமான சீரான ஒரு தன்மையின் அடையாளமாகும். உலகக் கோப்பை அல்லது ஒலிம்பிக் தகுதி என்று தற்போதைக்கு அடைய முடியாத இலக்குகளை விட, தொடர்ந்து ஆசிய அளவில் சிறந்து விளங்குவதே இந்திய அணிக்கு தேவையானது.
— Indian Football Team (@IndianFootball) June 14, 2022
இந்தியா தனது கடைசி இரண்டு ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் கம்போடியாவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்ற பின்னர், ஆப்கானிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன் விளைவாக, பாலஸ்தீனியர்கள் 24 அணிகள் கொண்ட இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றனர், அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த பிலிப்பைன்ஸ், நான்கு புள்ளிகளுடன், இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும் வெளியேற்றப்பட்டது.
ஆறு தகுதிபெறும் குழுக்களின் வெற்றியாளர்கள் மட்டுமே போட்டிக்கு முன்னேறுவது உறுதி, அங்கு அவர்கள் அந்தந்த குழுக்களில் ஐந்து சிறந்த இரண்டாவது இடங்களைப் பெறும் அணிகளுடன் இணைவார்கள்.
ஹாங்காங்கிற்கு (6 புள்ளிகள்) பின்னால் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா கோல் வித்தியாசத்தில் தங்கள் இறுதிச் சுற்று குழு டி மோதலுக்கு முன்னதாகவே இப்போது தகுதி பெற்றுள்ளது. எனவே மீதமிருக்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி ரிலாக்ஸ் ஆக ஆட முடியும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.