Home /News /sports /

ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக இந்திய கால்பந்தை அழிப்பதா?- பயிற்சியாளர் ஸ்டைமக் காட்டம்

ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக இந்திய கால்பந்தை அழிப்பதா?- பயிற்சியாளர் ஸ்டைமக் காட்டம்

இந்திய அணியின் கால்பந்து பயிற்சியாலர் ஐகர் ஸ்டைமக்

இந்திய அணியின் கால்பந்து பயிற்சியாலர் ஐகர் ஸ்டைமக்

ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணியினர் ஹாங்காங்கை வீழ்த்தியதையடுத்து இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக முக்கியமான கேள்வி ஒன்றை காட்டமாக எழுப்பினார்.  அதாவது ஐபிஎல் கிரிக்கெட், அதன் ஒளிபரப்பு உரிமைகளுக்காக  கால்பந்தை மாற்றி அதை நசுக்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணியினர் ஹாங்காங்கை வீழ்த்தியதையடுத்து இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக முக்கியமான கேள்வி ஒன்றை காட்டமாக எழுப்பினார்.  அதாவது ஐபிஎல் கிரிக்கெட், அதன் ஒளிபரப்பு உரிமைகளுக்காக  கால்பந்தை மாற்றி அதை நசுக்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  முதலில் வெற்றிகள் குறித்த மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட பிறகு நாட்டு விளையாட்டுக்களை கிரிக்கெட் என்ற ஒன்று கபளீகரம் செய்வது பற்றிய மிக முக்கியாமான கேள்வியை மிகவும் சின்சியராக எழுப்பினார். இவருக்கு பல நாடுகளிலிருந்து அழைப்பு இருந்தும் ஸ்டைமக் இந்தியாவை தேர்வு செய்தார், பல மடங்கு சம்பளம் குறைவுதான், இருந்தாலும் அவர் தனக்கு இந்தியாவை மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.

  அவர் கூறியதாவது:

  இந்திய கால்பந்து அணியுடன் எனக்கு மிகப்பெரிய திட்டங்கள் இருக்கின்றன. டாப் ஆசிய கால்பந்து நாடுகளுக்கிடையே 8-10 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறோம். அனைத்திந்திய கால்பந்து கழகத்தின் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் என் பதவிக்காலம் செப்டம்பர் வரை இருக்கிறது என்றார். ஆனால் கால்பந்து ஷெட்யூல், காலண்டர் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர் அறிய வேண்டும்.

  நான் அனைத்திந்திய கால்பந்து கழகத்துக்கு கடப்பாடு உடையவன். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும், 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணி தங்களாலும் முடியும் என்று உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் வந்ததன் பாதி பணி கூட இன்னும் நிறைவேறவில்லை. எனவே நான் இப்போது வெளியே போக விரும்பவில்லை.

  ஒப்பந்தத் திருத்தம் முன் கூட்டியே நடந்தால் தேசிய அணிக்கான பயிற்சி உள்ளிட்டவைகளை சீக்கிரம் தொடங்க முடியும். நான் இந்திய அணிக்காக பயிற்சியை தொடங்கிய போது என் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்தது, தேசிய கால்பந்து அணியை மேலே கொண்டு வர அனைத்துத் தரப்பும் கூட்டிணையும் என்று கருதினேன். ஆனால் சிலர் தங்கள் சுயநலத்திட்டங்களில் ஈடுபட்டனர். சிலருக்கு தேசிய கால்பந்து அணி முன்னேற வேண்டுமென்பதும் தெரியவில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும், எத்தனை காலம் பிடிக்கும் என்பதும் தெரியவில்லை.

  இந்திய அரசிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். எல்லா நாடுகளும் அயல்நாட்டு வீரர்களை அழைக்கின்றனர், இந்தியாதான் அப்படி செய்வதில்லை, இது ஒருவிதத்தில் முடக்கம்தான். இந்திய அணியை பெரிய அணியாக்கிக் காட்ட எனக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை, எனவே நான் என் பணியில் கவனம் செலுத்தினேன்.
  எங்கள் கைகள் கட்டப்பட்டே கிடந்தன, இப்போது கவனம் செலுத்துவதே பிரதான கடமையாக உள்ளது. பேச்சைக் குறைப்போம் பெருக்குவோம் உழைப்பை.

  கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒளிபரப்பு உரிமைகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கால்பந்து முடக்கப்படுகிறது. கால்பந்து இந்தியாவில் பெரிய ஒன்றாக மாற வேண்டுமெனில் இத்தகைய நிலை நிறுத்தப்பட வேண்டும். கால்பந்து காலண்டர், நிகழ்வுகள் ஐபிஎல்-ஐ நம்பி இருக்கக் கூடாது, ஐபிஎலுக்காக அட்ஜஸ்ட் செய்யப்படக்கூடாது.

  இந்தியாவில் கிரிக்கெட் பிரபலம்தான் இல்லை என்று கூறவில்லை, அதற்காக கால்பந்து அல்லது மற்ற விளையாட்டு பிரபலமடைவதைக் கண்டு பயப்பட வேண்டுமா என்ன? இதைச்செய்ய கால்பந்து கதவுகளை இந்திய அரசு திறக்க வேண்டும்.இல்லையெனில் எதுவும் நடக்காது, கிரிக்கெட்டுக்காக் கால்பந்து நசிவடையக் கூடாது.
  இவ்வாறு கூறினார் ஸ்டைமக்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Football, IPL

  அடுத்த செய்தி