Home /News /sports /

ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா

ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா

நடுவில் இருக்கும் இந்திய வீரர் ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களை அடிக்க பாக்.ஐ இந்தியா 3-1 என்று வீழ்த்தியது.

நடுவில் இருக்கும் இந்திய வீரர் ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களை அடிக்க பாக்.ஐ இந்தியா 3-1 என்று வீழ்த்தியது.

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இதன் மூலம் 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்றுள்ளது.

    தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 2-0 என்ற முன்னிலையிலிருந்து 2-2 என்று ட்ரா செய்த இந்திய அணி வங்கதேசத்தை அடுத்தப் போட்டியில் வென்று தற்போது பாகிஸ்தானையும் 3-1 என்று வீழ்த்தியுள்ளது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணியினர் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து இருந்ததுடன், எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கடும் நெருக்கடி அளித்தனர். இந்திய அணியினர் கோல் அடிக்க எடுத்த பல முயற்சிகளை பாகிஸ்தான் பின்கள வீரர்களும், கோல் கீப்பர் மஜார் அப்பாசும் அருமையாக தடுத்து நெருக்கடி கொடுத்தனர்.

    இதற்கிடையில், 8-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் போட்டது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த கோலை அடித்தார். பிறகு ஹர்மன் பிரீத் சிங் தான் 53வது நிமிடத்திலும் இன்னொரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். 42-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் பந்தை வலைக்குள் அடித்து பீல்ட் கோல் மூலம் அணியின் முன்னிலையை அதிகரித்தார். 45-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஜூனைத் மன்சூர் பதில் கோல் திருப்பினார்.

    அதன் பிறகு பாகிஸ்தானின் கோல் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் டிரா (2-2) கண்டு இருந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்று இருந்தது. 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா ஏறக்குறைய அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. பாகிஸ்தான் அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் ஜப்பானுடன் கோல் இன்றி ‘டிரா’ செய்து இருந்தது.

    கடந்த முறை இந்தியாவும்-பாகிஸ்தானும் இணை சாம்பியன்களாயினர், காரணம் மஸ்கட்டில் நடந்த இறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் முதல் 3 கால் மணி நேர ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் இருந்ததென்றால், கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை படுத்தி எடுத்து விட்டது. ஒரு பெனால்டி கார்னரையும் பெற்றது, ஆனால் இந்தியா டிவி ரிவியூவில் அதை முறியடித்தது.

    Also Read: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-0-வுக்குப் பிறகு வெற்றியை நழுவ விட்ட இந்தியா

    மேலும் ஆட்டத்தை நெருக்கிய பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து 2 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன, ஆனால் இந்திய இளம் கோல் கீப்பர் சூரஜ் கர்கேரா அபாரமாகத் தடுத்தார். இரண்டுமே பிரில்லியண்ட் சேவ்கள். ஆட்டம் முடிய கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. வருண் குமாரின் முயற்சியை பாகிஸ்தான் அபார கோல் கீப்பர் அப்பாஸ் முறியடித்து விட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asian Champions Trophy Hockey, India vs Pakistan Hockey

    அடுத்த செய்தி