Home /News /sports /

ஆசியக் கோப்பை ஹாக்கி: அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்திய ஹாக்கி அணி: 16 கோல்களை அடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்- பாகிஸ்தான் வெளியேற்றம்

ஆசியக் கோப்பை ஹாக்கி: அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்திய ஹாக்கி அணி: 16 கோல்களை அடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்- பாகிஸ்தான் வெளியேற்றம்

இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்கள் அடித்த இந்தியா

இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்கள் அடித்த இந்தியா

இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

    இந்தோனேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கி கடைசி லீக் போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் கடைசி 4 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு இருந்தது, ஆனால் சமயத்துக்கு எழுச்சி பெற்று இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களை திணித்து 16-0 என்று அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதோடு பாகிஸ்தானை வெளியேற்றியது.

    ஜப்பானிடம் பாகிஸ்தான் 3-2 என்று தோற்க பாகிஸ்தான் மொத்தம் 16 கோல்கள் போட்டு 4 கோல்களை வாங்கியதால் 12 கோல்கள் வித்தியாசத்தில் இருந்தது. இந்திய அணி நேற்று 16 கோல்கள் ஜப்பானுக்கு எதிராக 2 கோல்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 1 கோல் என்று மொத்தம் 19 கோல்கள் போட்டிருந்தது, அதிலிருந்து வாங்கிய கோல்களான 5+1 கோல்களை கழித்தால் இந்தியா 13 கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைக் கடந்ததால் இருவரும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் 2023 உலகக்கோப்பை வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது.

    நேற்று இந்தியா 16 கோல்களுக்கும் மேல் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்,  அது ஜப்பான் - பாகிஸ்தான் மேட்ச் ரிசல்டுக்கு முன்னதாக, ஜப்பான் பாகிஸ்தான் போட்டி 3-2 என்று ஜப்பான் வென்றதையடுத்து இந்தியா குறைந்தது 15 கோல்களையாவது அடித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலை. ஆனால் வெளுத்து வாங்கி அசாத்தியத்தை சாத்தியமாக்கினர்.

    தமிழக வீரர் கார்த்தி செல்வம் 2 கோல்களை அடித்தார், எஸ்.வி.சுனில், பவன் ராஜ்பார் ஆகியோரும் தலா 2 கோல்களை அடித்தனர். உத்தம் சிங், நிலம் சஞ்ஜீப், தலா ஒரு கோல் அடித்தனர். 10வது நிமிடத்தில் இந்திய வீரர் ராஜ்பார் தளைகளைக் கடந்து சர்க்கிளிலிருந்து சக்தி வாய்ந்த ஷாட்டை ஆடினார். முதல் கோல். பிறகு ராஜ்பார் மீண்டும் ஒரு கோல் அடித்து இந்தியா 2-0, பிறகு உத்தம் ஒரு கோல் அடிக்க 3-0, 19வது நிமிட பெனால்டி கார்னரில் சுனில் கோல் அடிக்க இந்தியா 4-0, பிறகு இரண்டு அடுத்தடுத்த பெனால்டி கார்னரில் ஒன்று கோல் ஆக இந்தியா 5-0.

    பிறகு கார்த்தி செல்வம் கொடுத்த பந்தை சுனில் கோலாக மாற்ற இந்தியா 6-0. 40வது நிமிடத்தில் இன்னொரு கோல் விழுந்தது. பிறகு 3 பெனால்டி கார்னர்கள் வரிசையாகக் கிடைக்க அதில் 2 கோலானது. 42வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் கோல் ஒன்று கிடைத்தது.

    பிறகு இந்திய வீரர் பெலிமகா 2 கோல்களை அடுத்தடுத்து அடிக்க, திப்சன் திர்க்கி ஹாட்ரிக் கோலை அடித்தார் இந்தியா 12-0. தொடர்ந்து இந்தோனேசியா சொதப்ப இந்திய அணி மேலும் 4 கோல்களை அடித்தது. திப்சன் திர்க்கி கடைசியில் 2 பெனால்டி கார்னர்களை கோல்களாக மாற்றியிருக்கா விட்டால் தகுதி பெறுவது கஷ்டமாகியிருக்கும்.

    இந்தோனேசியா போட்டியை நடத்தும் நாடு என்பதால் ஆடுகிறதே தவிர மற்றபடி அங்கு ஹாக்கி அணியெல்லாம் ஒன்றும் இல்லை, இருக்கும் வீரர்களைத் தட்டிப்போட்டு ஒரு அணியைக் கொண்டு வந்துள்ளனர், பாவம் அதனால்தான் ஜப்பானிடம் 9-0, பாகிஸ்தானிடம் 13-0, இந்தியாவிடம் 16-0 என்று படுதோல்விகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாலு இந்த இந்திய அணியிடம் சரி செய்ய வேண்டிய கோளாறுகள் ஏகப்பட்டது உள்ளன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia championship hockey, India vs Pakistan Hockey

    அடுத்த செய்தி