பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர்- இந்தியா புறக்கணிப்பு: கல்வான் தாக்குதல் ராணுவ வீரரை ஒலிம்பிக் தீபத்தை ஏந்துபவராக நியமிப்பதா?
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர்- இந்தியா புறக்கணிப்பு: கல்வான் தாக்குதல் ராணுவ வீரரை ஒலிம்பிக் தீபத்தை ஏந்துபவராக நியமிப்பதா?
இந்தியா-சீனா கொடிகள்.
வெளியுறவு அமைச்சகம் (MEA) நேற்று அறிவித்ததாவது: 17 நாட்கள் நீடிக்கும் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் இந்தியா கலந்து கொள்ளாது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை மெகா விளையாட்டு நிகழ்விற்கு அதன் தீபமேந்துபவராக நியமித்து சீனா கௌரவித்ததை கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் (MEA) நேற்று அறிவித்ததாவது: 17 நாட்கள் நீடிக்கும் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் இந்தியா கலந்து கொள்ளாது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை மெகா விளையாட்டு நிகழ்விற்கு அதன் தீபமேந்துபவராக நியமித்து சீனா கௌரவித்ததை கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய MEA செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “ஒலிம்பிக்ஸை அரசியலாக்க சீனா தேர்வு செய்திருப்பது வருந்தத்தக்கது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அல்லது நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார்.
கால்வான் பகுதியில் இந்திய வீரர்களுடன் போரிட்ட சீன ராணுவ வீரர் கி ஃபாபவோ, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றதால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் தொடக்க விழாவின் நேரலையை ஒன்றிய அரசின் உத்தரவுப்படி ரத்து செய்வதாக தூர்தஷன் அறிவித்துள்ளது.
ஜூன் 15, 2020 அன்று கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடனான மோதலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) படைப்பிரிவின் தளபதி, பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்ல சீனாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 15, 2020 அன்று கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு கிழக்கு லடாக் எல்லை தகராறுகள் அதிகரித்தன.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று, 4-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் தொடங்கியது.
இரு தரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளின் மிகக் கடுமையான இராணுவ மோதல்களைக் குறிக்கும் மோதலாகக் கருடப்படும் கல்வான் மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய ராணுவத்துடனான மோதலில் ஐந்து சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது, இருப்பினும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.
இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் 30 அரச மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களை சந்திப்பதற்காகவும் பாகிஸ்தான் பிரதமர் நான்கு நாள் அதிகாரபூர்வ அரசுப் பயணமாக சீனா சென்றுள்ளார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.