ஒலிம்பிக் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி - வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்!

வெண்கலம் உறுதி செய்தார் லவ்லினா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு வென்ற வெயிட் லிப்டிங் வெள்ளிப்பதகக்த்துக்குப் பிறகு குத்துச் சண்டையிலும் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு வென்ற வெயிட் லிப்டிங் வெள்ளிப்பதகக்த்துக்குப் பிறகு, குத்துச் சண்டையிலும் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    இன்று நடந்த 69 கிலோ உடல் எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார், இதன் மூலம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.

    இன்று நடந்த போட்டியில் சைனீஸ் தைபே வீராங்கனையும் முன்னாள் உலக சாம்பியனுமான சென் நியென் சின் என்பவரை 4-1 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரையிறுதிக்குள் நுழைந்ததையடுத்து இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார், ஆனால் இவர் திறமைக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    Also Read: Tokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை

    மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக பாக்சிங்கில் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனையாவார் லவ்லினா.
    Published by:Muthukumar
    First published: