Home /News /sports /

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: கொரோனா தொற்றால் முன்னணி வீரர்கள் விலகல்

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: கொரோனா தொற்றால் முன்னணி வீரர்கள் விலகல்

இந்தியா ஓபன் தொடரில் கொரோனா ஊடுருவல்

இந்தியா ஓபன் தொடரில் கொரோனா ஊடுருவல்

தினசரி ஆர்டி-பிசிஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன, அங்கு தினசரி ரேபிட் ஆன்டிஜென் சோதனையும் (RAT) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடுமையான நடவடிக்கைகளால், வரும் நாட்களில் போட்டியிலிருந்து விலகும் வீரர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    டெல்லியில் நடந்து வரும் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரிலிருந்து கொரோனா தொற்று காரணமாக முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர்.

    உலக சாம்பியனில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிடம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் கொரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து விலகியுள்ளனர்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆடவர், மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றுக்கு பிவி.சிந்து, கிடம்பி ஸ்ரீகாந்த், லக்கயா சென், சாய்னா நேவால் ஆகியோர்2-வது சுற்றுக்குச் சென்றுள்ளனர்.

    டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதால், நாள்தோறும் வீரர், வீரராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. விடுதியிலிருந்து இருந்து புறப்படும்போதும், மைதானத்திலும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் சாய் பிரணித், இரட்டையர் பிரிவில் மனு அத்ரி, துருவ் ராவத் ஆகியோருக்கு கரோனா தொற்று இருந்ததால் அவர்கள் டெல்லிக்கே வரவில்லை.

    மிதுன் மஞ்சுநாத் மற்ற ஒற்றையர் ஆட்டக்காரர் ஆவார், மீதமுள்ளவர்கள் - ரித்திகா தாக்கர், ட்ரீசா ஜாலி, சிம்ரன் சிங்கி மற்றும் குஷி குப்தா - இரட்டையர் விளையாடுகின்றனர். இந்த வீரர்களின் இரட்டையர் பார்ட்னர்களான என்.சிக்கி ரெட்டி பி.காயத்ரி கோபி சந்த், அக்ஷன் ஷெட்டி மற்றும் காவ்யா குப்தா ஆகியோரும் விலக வேண்டியதாயிற்று.

    கூடுதலாக, சிக்கி மற்றும் சிம்ரனின் இரட்டையர் கூட்டாளிகளான துருவ் கபிலா மற்றும் அக்ஷன் ஷெட்டி ஆகியோரும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், துருவ்வின் ஆடவர் இரட்டையர் பார்ட்னர் எம்.ஆர்., அர்ஜுன் மற்றும் அக்ஷனின் பார்ட்னர் உத்கர்ஷ் அரோராவும் விலக நேரிட்டது.

    ஆடவருக்கான இரண்டாம் நிலை வீரரான பி. சாய் பிரனீத் கொரொனா பாசிட்டிவ் ஆன பிறகு முதலில் விலகினார். இதுவரை, அதிகரித்து வரும் கோவிட் தொற்றுக்களால் பாதிக்கப்படாத பெண்கள் ஒற்றையர் போட்டியே உள்ளது.

    புது டெல்லியில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்களைக் கருத்தில் கொண்டு,  போட்டி நடைபெறும் உள்ளரங்கமான கே.டி. ஜாதவ் ஹாலை அணுகும் முன்னரே கோவிட் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. தினசரி ஆர்டி-பிசிஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன, அங்கு தினசரி ரேபிட் ஆன்டிஜென் சோதனையும் (RAT) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடுமையான நடவடிக்கைகளால், வரும் நாட்களில் போட்டியிலிருந்து விலகும் வீரர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Badminton, Corona positive

    அடுத்த செய்தி