7 இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தியா ஓபன் தொடரானது உலக அளவில் நடத்தப்படும் 7 சூப்பர் 500 தொடர்களுள் ஒன்றாக உலக பேட்மிண்டன் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொடராகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக இத்தொடர் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான தொடர் கொரோனா பரவலுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்ளரங்கத்தில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது, கடந்த ஜனவரி 11ம் தேதி முதல் வரும் 16ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது. இதில் கனடா, டென்மார்க், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Also read: கொரோனா பாதிப்பால் ஆண் உறுப்பின் அளவு சிறிதானது; விறைப்பு குறைபாடு - இளைஞர் பகீர் தகவல்
கொரோனா விதிமுறைகளின் ஒரு பகுதியாக போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலிலும், விளையாட்டரங்கிலும் தினசரி அளவில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி 7 இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உலக பேட்மிண்டன் சம்மேளனம் இதனை அறிவித்துள்ளது.
Also read: ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை
மேலும் பாதிக்கப்பட்ட வீரர்கள் போட்டித் தொடரில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட வீரர்களுடன் மோதும் எதிர் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 இந்திய வீரர்கள் யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை. இதன் மூலம் இந்தியா ஓபன் தொடரில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2019ல் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சாய் பிரனீத், டபுள்ஸ் வீரர்களான மனு அத்ரி, துருவ் ராவத் ஆகியோர் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இத்தொடரில் இருந்து விலகியது நினைவுகூறத்தக்கது.
Also read: 43வயது மெக்கானிக்கை கொலை செய்து ஆண் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியர்
இதே போல இங்கிலாந்து பயிற்சியாளர் நாதன் ராபர்ட்சன் மற்றும் வீரர் சீன் வெண்டி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் இந்தியா ஓபனில் கலந்து கொள்ளாமல் விலகியது.
அதே நேரத்தில் இத்தொடரில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்களான கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால், லக்ஷயா சென் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த உலக சாம்பியனான Loh Kean Yew, மூன்று முறை இரட்டையரில் உலக சாம்பியன் பட்டம் வென்ற மலேசியாவின் Mohammad Ahsan, தாய்லாந்தின் Busanan Ongbamrungphan ஆகிய சர்வதேச நட்சத்திரங்களும் இத்தொடரில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.