லாக்டவுனுக்குப் பிறகு நடைபெறும் முதல் சர்வதேச நட்புக் கால்பந்து போட்டியில் இந்தியா-ஓமன் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.
கொரோனாவுக்கு பிறகு முதன் முதலாக சர்வதேசக் கால்பந்தில் கலந்து கொள்ள இந்திய கால்பந்து அணி துபாய் சென்றுள்ளது. இங்கு ஓமன், யுஏஇ அணிகளுடன் நட்புக் கால்பந்தில் இந்திய அணி ஆடுகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 81வது இடத்திலிருக்கும் ஓமன் அணியை சந்தித்தது . 42வது நிமிடத்தில் ஓமன் அணி கணக்கில் முதல் கோல் விழுந்தது, காரணம் 42வது நிமிடத்தில் ஓமனின் அல் அக்பரி அடித்த பந்தை வெளியே தள்ளும் முயற்சியில் இந்திய வீரர் சிங்லென் சனா சேம்சைடு கோல் அடிக்க ஓமன் கணக்கில் முதல் கோல், 1-0 என்று முன்னிலை வகித்தது.
பிறகு 55வது நிமிடத்தில் மன்வீர் சிங் ஒரு கோல் அடிக்க சமன் ஆனது. ஓமனுக்கு எதிராக அரிதான ஒரு டிராவாக இது அமைந்தது.
இந்தியப் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமக் 10 அறிமுக வீரர்களை, பதிலி வீரர்களுடன் தைரியமாகக் களமிறக்கினார். முதல் பாதியில் ஓமன் இந்திய அறிமுக வீர்ர்களைப் பந்தாடினர், திக்குமுக்காடிய இந்திய அணியால் ஒரு ஷாட் கூட ஓமன் கோலை நோக்கி அடிக்க முடியவில்லை.
ஓமன் தாக்குதலைத் தடுக்க 10 வீரர்களும் இந்தியப் பகுதியிலேயே நிற்க ஒருவர் மட்டும் முன்னிலை களத்துக்கு அனுப்பப்பட்டார், 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஓமன் தவறவிட்டது.
ஆனால் 42வது நிமிடத்தில் ஓமன் வீரர் அல் அக்பரி இடது புறம் மிக அபாரமாக ஒரு பந்தை கொண்டு வந்து இந்திய கோலை நோக்கி அடித்தார். அம்ரிந்தரால் இதனை சரியாகத் தடுக்க முடியாமல் பந்து சிங்லென்செனா மீது பட்டு கோலானது, இது சேம்சைடு கோல். ஓமன் 1-0 என்று முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் கொஞ்சம் தைரியத்துடன் தாக்குதல் ஆட்டம் ஆடிய இந்திய அணி 55வது நிமிடத்தில் வலது விங்கிலிருந்து பிபின் சிங் மிகப்பிரமாதமாக ஒரு கிராஸை செய்ய மன்வீர் அதனை அபாரமாக தலையால் முட்டி கோலாக மாற்றி சமன் செய்தா, 1-1 என்று சமன் ஆனது.
அதன் பிறகும் எப்படியோ இந்தியா 1-1 என்று அறிமுக வீரர்களை வைத்துக் கொண்டே ஓமனுக்கு எதிராக ஒரு அரிய டிராவைச் செய்தது. திங்களன்று யுஏஇ அணியை இந்திய அணி சந்திக்கிறது.
இந்தப் போட்டிகள் 2022 உலகக்கோப்பைப் போட்டி தகுதிச்சுற்றுக்களுக்கான தயாரிப்பு போட்டிகளாகும். ஆகவே சீரியஸ் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.