ஆப்கானின் ‘காமெடி’ செல்ஃப் கோல்: ஆசியன் கோப்பை தகுதி கால்பந்தில் அடுத்த சுற்றுக்கு இந்தியா தகுதி

இந்தியக் கால்பந்து அணி.

ஃபிபா உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை 2023க்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் 1-1 என்று இந்தியா டிரா செய்து பிரிவு இ-யில் 7 புள்ளிகளுடன் ஆசியக் கோப்பை 3வது தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.

 • Share this:
  ஏற்கெனவே 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்துக்கு இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

  இந்திய அணியின் சில முயற்சிகள் கோலாக மாறாமல் போக கடைசியில் ஆப்கான் தயவில் இந்தியா முன்னிலை பெற வேண்டியதாயிற்று. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் காமெடி போல் இருந்த காட்சியில் அஷீக் என்ற ஆப்கான் வீரர் கேஷுவலாக பந்தை ஆப்கான் கோல் பகுதியில் ஒரு கிராஸ் செய்ய ஆப்கான் கோல் கீப்பர் ஓவைஸ் அஜீஜி அதைப் பிடிப்பதில் கோட்டை விட பந்து கோலுக்குள் சென்றது, இதன் மூலம் இந்திய அணி ஆப்கான் தயவினால் 1-0 என்று முன்னிலை பெற்றது.

  ஆனால் இந்த முன்னிலையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் அந்த அணியின் வருங்கால சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஹுசைன் ஜமானி, நூர் ஹுசைனிடமிருந்து பெற்ற பந்தை வலது காலால் இந்திய கோலுக்குள் அடிக்க 1-1 என்று சமன் செய்தது.

  Also Read: Cristiano Ronaldo: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கோகோ கோலா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

  ஆட்ட முடியும் தறுவாயில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தாலும் பலனில்லை, 1-1 என்று டிரா செய்தது.

  Also Read: Ronaldo | Euro 2020 | தொடக்க சொதப்பலுக்குப் பிறகு ரொனால்டோ அபாரம், வரலாறு படைத்தார்! கடைசி 5 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து ஹங்கேரியைக் கவிழ்த்த போர்ச்சுகல்

  தொடக்கத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் அடித்த ஷாட்டை ஆப்கான் கோல் கீப்பர் அஜீஜி தடுத்தார். ஒரு முறை பிரெண்டன் பெர்னாண்டஸ் அடித்த கார்னர் கிக்கை சந்தேஷ் ஜிங்கன் தலையால் முட்ட கோல் ஆகவேண்டியது ஆப்கான் தடுப்பு வீரர் ஹரூன் ஆமிரியினால் வெளியே தள்ளப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சுனில் சேத்ரியும் சிறப்பாக தன் பங்கை அளித்தார். பாக்சிலிருந்து அடித்த ஷாட்டை ஆப்கன் கோல் கீப்பர் அஜிஜி தடுத்தார். முதல் பாதியில் வாய்ப்புகள் பெற்றும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.

  இரண்டாவது பாதியில் ஆப்கானின் ஓன் கோலினால் இந்தியா ஒரு கோல் முன்னிலை பெற அதனையும் சமன் செய்தது ஆப்கானிஸ்தான்.
  Published by:Muthukumar
  First published: